தேனி, தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பேராசிரியருக்கு நன்னெறி ஆசிரியர் விருது
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர்
பிரபஞ்சன் வழங்கினார்
தேனியில் உள்ள தேனீ கலை இலக்கிய மையம் சார்பில்
பெரியகுளத்தில் 18.3.2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற சாதனையாளர்களுக்குச்
சாதனை விருதுகள் வழங்கும் விழாவில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனுக்கு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற
நாவலாசிரியர் பிரபஞ்சன் “நன்னெறி ஆசிரியர்” விருதினை வழங்கிப் பாராட்டினார்.
இவ்விழாவில் எழுத்தாளர் தேனிசீருடையான் முன்னிலை வகித்தார்.
நன்னெறி
ஆசிரியர் விருது பெற்ற பேராசிரியர் ச.மகாதேவன் 19 ஆண்டுகளாக சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். கல்லூரியில்
பயிலும்போதே பாரதப் பிரதமரின் தேசியவிருது, தமிழக முதல்வரின்
உலகத்தமிழ்மாநாட்டு விருது பெற்றவர். சென்னையில் உள்ள கவிதைஉறவு அமைப்பின் தமிழ்மாமணி
விருது, சென்னை கதீட்ரல் அரிமா சங்கத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில
நல்லாசிரியர் விருது, பாலம் அமைப்பின் இளம்சமூகசேவகர் விருது உட்படப் பல விருதுகள் பெற்றவர்.
அவர் எழுதி மலேசியாவில் உள்ள மலயாப்
பல்கலைக்கழகமும் சென்னையில் உள்ள கலைஞன் பதிப்பகமும் இணைந்து மலேசியாவில்
வெளியிட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், வண்ணதாசன், இறையருட்கவிமணி
கா.அப்துல்கபூர் எனும் நூல்களுக்காவும், மாணவர்களுக்காக
அவர் தொடர்ந்து எழுதிவரும் நன்னெறி குறித்த எழுத்துகளுக்காவும் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பெரியகுளம் கோவிந்தன் மயில்தாயம்மாள் அரங்கில்
18.3.2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற சாதனையாளர்களுக்குச் சாதனை
விருதுகள் வழங்கும் விழாவில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனுக்கு நன்னெறி விருதினை சாகித்ய அகாதெமி
விருது பெற்ற நாவலாசிரியர் பிரபஞ்சன் வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் தேனீ கலை
இலக்கிய மையத்தலைவர் பாண்டியராஜன், எழுத்தாளர் தேனி சீருடையான் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
படத்தில்: பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்
தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனின் கல்விப்பணிகளைப் பாராட்டி சாகித்ய அகாதெமி விருது
பெற்ற நாவலாசிரியர் பிரபஞ்சன் நன்னெறி ஆசிரியர் விருதினை வழங்குகிறார். அருகில்
தேனீ கலை இலக்கிய மையத் தலைவர் பாண்டியராஜன் உள்ளார்.
Comments
Post a Comment