காலண்டர் கடிதம்
காலத்தைக் கிழித்துப் போடும் காலண்டர்கள் எங்களுக்குப் பேதங்கள் பெரிதில்லை . பெரியார் படத்தையும் பெரிய பாளையத்தம்மன் படத்தையும் நாங்கள் எளிதாக எங்கள் மேல் ஏற்றுக் கொள்கிறோம் . இன்னும் சொல்லப் போனால் ஈரோட்டுப் பெரியாருக்குக் கீழே நல்லநேரத்தை எங்கள் தாள்களின் மீதேற்றித் தைரியமாகத் தர முடிகிறது . சுதந்திர தினங்களைக் காலத்தாள்களால் கட்டமிட்டு ச் சொல்லும் எ ங்க ளை ஆண்டுதோறும் ஆ ணி கள் அறைந்து அட்டையோடு அடிமைப்படுத்தி விடுகிறார்கள் எங்களில் சில கம்பிகளால் கட்டப்பட்டு காயப்படுத்தப்படுகிறோம் எங்களின் மறுபக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது ! விதவிதமான விடுமுறை நாட்களை ’ அப் ’ புறம்தானே காட்டியுள்ளோம் இப்போது எங்களுக்குள் இருக்கும் ஒரே கேள்வி இலவசமாய் கிடைத்ததென்று அறைக் கு இ ரண்டு மாட்டியுள்ளீர்களே ! பலவற்றில் தேதிகள் கிழிக்கப்பட வே இ ல்லை . கிழிபடப்போவது உங்களின் மிச்சக் காலங்களா ? - சவுந்தர மகா...