பிராய்லர் கோழியாய் சௌந்தர மகாதேவன்

பசலிப் பழங்களை நசுக்கி
நகச் சாயம் இட்டதில்லை
பஞ்சு மிட்டாய் தின்று
கண்ணாடியில்
நா நீட்டிப் பார்த்ததில்லை
சோப்பு நீர் கொண்டுக்
குமிழிகள் விட்டதில்லை
காகிதம் கிழித்துக்
கப்பல் ஒன்றும் விட்டதில்லை
வாடகை சைக்கிள் ஓட்டி
கை விட்டுப்  பறந்ததில்லை
பட்டம் விட்டதில்லை
படம் போட்டுப் பழக்கமில்லை
பம்பரம் பார்த்ததில்லை
கோலிக்கா சேர்த்ததில்லை
ஒன்றும் அறியாமல்
கம்பிக்குள் வாழ்கிறேன்
அரை மணி நேரத்தில்
அறுபடப் போகும்
 பிராய்லர் கோழியாய்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை