எந்திரத்திற்கும் எனக்குமான தொடர்பு



எந்திரத்திற்கும் எனக்குமான தொடர்பில்
எப்போதும்எந்திரமே என்னை ஆளமுயல்கிறது
மூளையின் இருப்பு பன்மடங்குபெருகிய
 நினைவுச்சில்லாகப் படுகிறது இப்போது எனக்கு.
அத்திரிப்பட்சா கொழுக்கட்டையை
நினைவுபடுத்துவதாய் அமைகின்றன
சில நேரங்களில் என்செயல்களும்.
எந்திரத்திற்கும் எனக்குமான உரையாடல்
ஏற்கனவே நிரல்படுத்தப்பட்டபடியே நடக்கின்றன.
அவை பெரும்பாலும்
 கொள்குறிவினாக்களாகவே அமைகின்றன.
அங்கே புனைவுகளுக்கு இடமில்லை
புரிதல்களுக்கு வழியில்லை.
எதையோ தேடப்போய் எங்கோ கொண்டுவிடும்
தேடுபொறிகளாய் என்மனமும் இப்போது எந்திரதிரமாய்..


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை