செப்டம்பர்- 5 ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை பாடம் நடத்துபவர் ஆசிரியர், பாடமாய் நடப்பவர் நல்லாசிரியர். வழிகாட்டியாய் திகழ்பவர் ஆசிரியர், வாழ்ந்துகாட்டியாய் வாழ்பவர் நல்லாசிரியர். பெற்றெடுத்ததற்காகப் பெற்றோருக்கு நன்றி சொல்லும் நாம், எழுத்தறிவித்ததற்காக அகிலம் போற்றும் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். தாய் ஈன்று புறந்தந்து தந்தையைக் காட்டுகிறாள், தந்தை, அறிவின் ஊற்றாயிருக்கும் ஆசிரியரை அடையாளம் காட்டுகிறார், அந்த உன்னதமான ஆசிரியரே தெய்வத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறார். அறியாமை இருளை அகற்றி அறிவு தீபத்தை ஏற்றிவைக்கும் நற்பணியை ஆசிரியர்களே செய்கிறார்கள். ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கின்றன. ஏணி அனைவரையும் ஏற்றிவிட்டு இருந்த இடத்திலே இருக்கும், தோணி அனைவரையும் கரையேற்றிவிட்டுத் தண்ணீருக்குள்ளேயே மிதந்துகொண்டிருக்கும், அண்ணாவி என்கிற ஆசிரியர் தம் மாணவரைச் சனாதிபதியாக உயர்த்திவிட்டாலும் மிக அடக்கமாக அதே பள்ளியில், ...
தமிழ் இலக்கியப் பதிவுகளில் சூரசம்ஹாரம் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சஷ்டியில் விரதமிருந்தால் அகம் எனும் பையில் அருள்சுரக்கும்! அந்த அளவு வலிமை மிகுந்த கந்தர் வழிபாடும் சூரசம்ஹாரமும் பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டதைத் தமிழ் இலக்கியம் பாடல்வரிகளால் பதிவுசெய்துள்ளது. தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தந்துவந்த சூரபத்மனின் அகந்தையை அழிப்பதற்குச் சிவபெருமான் தன் அதோமுகத்தைக் காட்ட அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிருந்து ஆறுமுகங்கள் ஆறு குழந்தைகளாய் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் எழுந்தருள, அவர்களை ஆறுகார்த்திகைப் பெண்கள் வாரியணைக்க ஈசன் சில காலத்தில் ஆறுமுகப்புதல்வர்களை ஒன்றாக்கினார். முருகப்பெருமான் சூரனை அழிக்க நூறுமுகங்களின் ஒளிப்பிழம்போடு ஆறுமுகமாய் அவதரித்தார். அன்னை பராசக்தி தன் சக்தியை ஒன்றுதிரட்டிச் சக்திவேலை தந்தாள். தாய் தந்த வேலை சூரபத்மன் மீது திருமுருகன் வீச அவன் மாமரமாய் மாயத்த...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர்- 3 எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரத்தில்தான் ................................................................................................... மகத்தான சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி,9952140275 முடியாதென்ற முடிவு முடமாக்கும் நம் வாழ்க்கையை, முடியுமென்ற தீர்வு திடமாக்கும் நம் சாதனையை. முடியாதென முனகுகிறவனுக்கு விடியாது எந்நாளும். பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை பிடித்த துயரமனம் வாழ்வை வழுக்கித் தள்ளும். எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் நம்மை சில நேரங்களில் வியக்க வைக்கிறார்கள், சில நேரங்களில் தங்கள் வேகத்தாலும் விவேகத்தாலும் நம்மை இயக்கவும்வைக்கிறார்கள். கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத சாதனை படைத்த மகத்தான மாற்றுத்திறனாளிகள் ச...
Comments
Post a Comment