திருநெல்வேலி,சௌந்தர மகாதேவன் கவிதைகள்



விரல்வலி
............................
எழுதிச்செல்கின்றன
விரல்கள் ஏதேதோ
நெருப்பு குறித்து எழுதும்போது
சுட்டுவிரலில் சுடர்விடுகிறது
 நெருப்பு சிகப்பாய்
மயானம் குறித்து எழுதும்போது
மண்துகள் நெருடுகிறது
பெருவிரல் நகக்கண்ணிலும்
வனம் குறித்து எழுதும்போது
மொட்டுகள் முகிழ்கின்றன
சுட்டுவிரல் நுனியிலும்
வன்புணர்வு குறித்துஎழுதும்போது
கத்தியாகிக் கிழிக்கின்றன
விரல்பத்தும்.
காரையார் குறித்து எழுதும்போது
அருவி வழிகிறது
அனைத்து விரல்களிலும்
உரல்களை நகர்த்தும் விரல்களால்
நோண்டுகிறோம்
விரல்வலியறியாமல்



காலமரம்
....................
நினைவற்ற நெடுங்காட்டில்
நீண்டுயர்ந்து வளர்கின்றன
புனைவற்ற என் காலமரங்கள்.



நகரும் சவம்
..............................
நகர்த்திப்போகின்றன
நாட்களை வினாடிகள்
நகர்த்திப்போகின்றன
ஆண்டுகளை நாட்கள்
நகர்த்திப்போகின்றன
ஆண்டுகளை யுகங்கள்
நகர்த்திப்போகின்றன
யுகங்கள் ஆட்களை
நகர்த்திப்போகின்றன
ஆட்களைச் சவங்களாய்


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்