பொய்பற்றி எரியும் கவிதைகள்




மலர்களைத் தின்பவனிடம்
வனரணம் பற்றி வரையச் சொன்னது
என் தவறுதான்.
நதிக்குள் நீர்க்கழிப்பவனிடம்
கங்கைச் செம்புதந்தது
என் தவறுதான்.
நூலகம் எரிப்பவனிடம்
அணிந்துரைக்கு அலைந்தது
என் தவறுதான்.
நெய்பற்றி எரியும் நெருப்பு மாதிரி
பொய்பற்றி எரிகின்றன உன் புரட்டுக் கவிதைகளும்.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை