காப்பூர்திகள்



எல்லாச் சாலைகளிலும்
அலறல் ஒலியுடன்
அலைகின்றன
தலையில் விளக்கணிந்த
காப்பூர்திகள்
உட்கிடப்பவனுடன்
உடனிருப்போர்
அவனையும் பரபரப்பான
சாலையையும்
மாறிமாறிப் பார்த்தபடி
பதற்றத்தோடு
நொடிகளைக் கடக்கிறார்கள்
உயிரைக் காக்கும் உந்துதலுடன்
வாகன வட்டைச் சுழற்றும்
ஓட்டுநரின் கவலை
வழிவிடாமல் முன் விரைந்து கடக்கும்
வாகனங்கள் குறித்துதான்
எதுவுமே எடக்குதான்
நாம்
பாதிக்கப் படாமலிருக்கும் வரை...

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி