இன்று...




தொட்டணைத்து ஊற மறுக்கின்றன
மணற்கேணிகள்
இருநூறு அடிதாண்டி துளையிட்ட பின்பும்

பீலி பெய்யாமலேயே
அச்சிறுகின்றன சாலையோரத்தில் பேருந்துகள்

கார்பைடு கல்லுக்குள் இருப்பதால்
கனியிருப்பக் காய் கவர்ந்துவந்து
அரிசி டப்பாவுக்குள் வைக்க வேண்டியுள்ளது.

மோப்பக் குழையும் அனிச்சம் போலன்றி
விருந்துக்கு வராதே என
விரைவஞ்சலில் மறுத்தெழுதினாலும்
அதற்குள் வந்து நிற்கிறான் முகவாட்டம் ஏதுமின்றி.
என் பிரிய விருந்தினை

ஸ்கேன் நாடிஃ எக்ஸ்ரே நாடிய பின்தான்
மருத்துவரையே நாட முடிகிறது

யாகாவாராயினும்
நா காக்க முடியவில்லை

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை