கவலை தந்த பத்திரிக்கை
என் மேசை முழுக்கத் திருமணப் பத்திரிக்கைகள்
ஜிகினாக்களின் மினுமினிப்பில்
பிள்ளையார் வெங்கடாசலபதி முருகன்
படங்கள் போட்டு
வண்ணமயமாய்…
அரசியல் தூண்டிலில் நெருக்கப்
புழுவாவதற்காகத்
தலைவர்களின் முழுநீளம் படங்களோடு
ஆடம்பரமாய் ஐந்தாறு பத்திரிக்கைகள்…
இடையில்
மரபு மாறாத சாமி படங்களை வரிசையாய் அடுக்கிய
மஞசள் நிறமரபுப் பத்திரிக்கைகள்
தலை வாழை இலை வடிவில்
குறுந்தட்டு வட்ட வடிவில்
எத்தனையோ பார்த்தாயிற்று…
எத்தனையோ வரிகள் அவற்றிலிருந்தாலும்
மண்டபப் பெயரும், மணநாளும் நேரமும்
மட்டுமே
மனம் மனனம்
செய்யும்
வரிசையாய் பத்திரிக்கைகளை
நகர்த்தி வந்தேன்..
திருக்குறள் சுவடிபோல் அச்சடிக்கப்பட்ட
அப்பத்திரிக்கை மட்டும்
அதிர்ச்சிதந்தது.
சப்த ரிஷிகளையும் சகல தெய்வங்களையும்
ஆசிர்வதிக்கச் செய்து
அவசியம் வரவேண்டுமென அப்பாவோடு
ஆயிரம் முறை அன்போடு அழைத்துச்சென்ற
செட்டிக்குடித் தெரு பத்மா அக்காவின்
திருமணத்திற்கு
அதில் பெயர் போட்ட ஒருவரும்
ஆசிதராததால் நின்று போனதோ?
அதன்பின்பு கல்யாணப் பத்திரிக்கைகளை
நான் சேர்த்து வைப்பதே இல்லை.
யாவரும்
தோளரே!

பேருந்துப் பயணங்களில்
விழித்திருந்து ரசிப்பவனாகவே!
பெரும்பாலும் நானிருப்பதால்
பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி
சில்லென்ற சன்னல் காற்றின்
சிலுசிலுப்பால் அயர்ந்து தூங்கியபடி
என் வெண்சட்டையணிந்த
தோள்மீது தலைசாய்க்கும்
அந்தப் பெயர் தெரியாத
பயணியின் தலை சுமக்கும்
தோழமை மிக்கத் தோளன் நான்
யாதும் ஊரே
யாவரும் தோளரே!
துயில்
Comments
Post a Comment