அடுத்த நாளை நோக்கி சௌந்தர மகாதேவன்



இருள் கசியும் மின்சாரமற்ற இரவுகள்
தலை தெறிக்க வேலைக்கு ஓடும்
நெருக்கடியான காலைகள்
கையேந்தி பவனோடு கழியும்
மதியப் பொழுதுகள்
நசுக்கும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க
மிகை நேரம் பணி புரியும்
மாலைகள்
இத்தனையும் பார்த்துப் பார்த்து
எரிச்சலோடு கிழி கின்றன
காலெண்டெர் தாள்கள்
அவதியான அடுத்த நாளை நோக்கி

                                                       சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை