மரத்த மனம் முனைவர் ச. மகாதேவன்




 



பொன்னமராவதி
பெருநாவலர்
மரக்கடைக்கருகில்
சவ ஊர்வலம் நடந்தபோது
பார்க்கப் பயந்துபோய்
திரும்பிய விநாடிகள்

சாலை முழுக்க
ஊர்வலம் போன
சுவடுகளின் சாட்சியாய்
மஞ்சள்
  மரண மலர்கள்!

 

இப்போது
குழந்தை கொல்லப்பட்ட
கொலைக் காட்சியைத்
தொலைக்காட்சியில்
பார்த்தாலும்
பாப்கானை அள்ளி
பல்லில் அரைத்துத்தள்ள முடிகிறது.
              
                                           

                         முனைவர் . மகாதேவன்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை