Posts

Showing posts from July, 2013

இருட்டறைகள்

Image
இருட்டறைகள்   எனக்கு   இதமானவை ஒப்பனைகள் ஏதுமின்றி கற்பனைகள் அவசியமின்றி இருப்பறிய   முடியா   இருட்டறைக்குள் கழிகின்றன என் பொழுதுகள் . என் அசைவுகளை   உன் இசைவின்றி   நானே இங்கு தீர்மானிக்கிறேன் . சாளரங்கள் அற்ற இவ்வறையில் என் பெருமூச்சைக் கூட உன்னால் கேட்க   முடியாது . பூனைக்குப் பயந்த எலியாய் புறந்தள்ளி   இருக்கும் என்னை உன் வரவால் வாசலுக்கு இழுத்துவிடாதே இருட்டறைகள்   எனக்கு   இதமானவை