Posts

Showing posts from February, 2017

தமிழ் நம் தடையகற்றும் அடையாளம்

Image
உலகத் தாய்மொழி நாள் சிறப்புக்கட்டுரை ( பிப்ரவரி 21)    http://www.dinamalar.com/news_detail.asp?id=1717447        பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,  தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,  திருநெல்வேலி, 9952140275 தாயிடமிருந்து நாம் கற்றமொழி, தாயாக நம்மைப் பெற்ற மொழி நம்மருமைத் தமிழ்மொழி. “தமிழ்..தமிழ்” என்று தொடர்ந்து சொன்னால் “அமிழ்து அமிழ்து” என்று நம் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. உலகமொழிகள் ஆறாயிரத்திலும் சிறந்தமொழி நம் அன்னைத் தமிழ்மொழி. எளிமையும் இனிமையும் நீர்மையும் கொண்ட உலகின் ஒப்பற்ற மொழி நம் தமிழ்மொழி. திராவிடமொழிகளின் தாய் பலநூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழிகளான கிரேக்கமும் எபிரேயமும் இலத்தீனும் இன்று பேசுவதற்கு அதிக மக்களின்றித் தவித்துக் கொண்டிருக்கப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தாய்மொழியான தமிழ் இன்றும் இணையத்தின் இதயத்தில் இதமாய் வீற்றிருக்கிறது. திராவிடமொழிகளின் தாயாகத் திகழும் நம் தமிழ்மொழி சொல்வளமும் பொருள்வளமும் மிக்கதாக இன்றும் இளமையோடும் இனிமையோடும் திகழ்கிறது. மொழி எனும் சொல்லுளி மனிதனை வி

தி இந்து கலை ஞாயிறு சௌந்தர மகாதேவன் கட்டுரை

Image
எழுத்து ஆன்மாவின் நுண்மொழி. அது எப்போதும் கிளம்பிவரும் கடலலை அன்று,   எப்போதோ வெளிக்கிளம்பும் புதுப்புனல். உயர்ந்த எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும்  ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு உள்ளார்ந்த  பொருளை மௌனமாய் பிரதிவழியே தந்துகொண்டேயிருக்கும். அதேபடைப்பு அதே  வாசகனுக்கேகூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பொருளைத் தந்து கொண்டேஇருக்கும்.  ஊடக கவனம் இல்லா நாட்களில் மௌனி எழுதியது 24 கதைகள்தான், சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் எழுதியது நூற்றுக்கும் குறைவான கதைகளைத்தான். ந. பிச்சமூர்த்தி எழுதாமலேயே பலஆண்டுகள் இருந்திருக்கிறார். அச்சு எந்திரத்தின் விரைவோடு போட்டிபோட்டு எழுதவேண்டிய சூழல், புத்தகத் திருவிழாவுக்கும், பதிப்பகங்களின் விருப்பத்திற்கும் இதழ்களின் தொடர்களுக்கும் எழுதவேண்டிய நிர்பந்தம் இவற்றால் காலம்கடந்து நிற்கும் தரத்தை இழந்துவிடவேண்டிய நிலைக்கு உட்படுகிறார்கள். சந்தர்ப்பத்தினாலோ நிர்ப்பந்தத்தினாலோ எழுதிக் குவிக்கப்படும் எழுத்துகள் எப்படித் தரமுடையதாய் அமையும்? ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியதில் காலஓட்டத்தில் எஞ்சி நிற்கப்போவது தரமான சிலநூறு பக்கங்கள்தான். எவ்வளவு எழுதினார்க

திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு நடத்திய சி.சு.செல்லப்பா வாடிவாசல் தொடர்பான இலக்கிய நிகழ்வு

Image

இந்த நாள் இனிய நாள்: சௌந்தர மகாதேவன்

Image