Posts

Showing posts from 2015

தினமலர் என் பார்வை கட்டுரை:மது இல்லாப் புத்தாண்டுக்கொண்டாட்டம்

Image
http://epaper.dinamalar.com/index.aspx?EID=356&dt=20151229#

புத்தாண்டுக் கொண்டாட்டம்: தினமலர் என் பார்வை

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் 92 மாணவர்கள் மருத்துவமுகாமில் தன்னார்வத் தொண்டராற்ற சென்னை சென்றனர்

Image
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் சார்பில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு ஆட்சிக்குழு, பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாணவமாணவியர் நெல்லை மாநகரப் பொதுமக்கள் உதவியோடு   கடந்தவாரம் 4 லட்சம் மதிப்புள்ள உதவிப்பொருட்கள் மற்றும் பணமாகவும் சேகரிக்கப்பட்டன. மருத்துவ முகாமுக்கு மாணவர்கள் உதவக்கிளம்பினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட   மக்களுக்கு உதவும்பொருட்டும், அவர்களுக்கு உதவிமுகாம்கள் நடத்தும்பொருட்டும், சென்னையில் முகாமிட்டுள்ள மருத்துவர்களோடு இணைந்து மருத்துவ முகாம்களில் உதவும்பொருட்டும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் இருபேராசிரியர்கள் தலைமையில் 92 மாணவர்கள் தன்னார்வத் தொண்டராற்ற 14.12.2015 மாலை 6.30 மணிக்குச் சென்னை கிளம்பினர். அவர்களை ஊக்குவித்து ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரிப்பள்ளிவாசல் பேஷ்இமாம் கே.எஸ்.பி.சேக்அப்துல்காதர் இற

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

Image
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 12.12.2015 அன்று காலை 11 மணிக்கு வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.  தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்பேசினார்.    கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன் நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார்.    கல்லூரி முதல்வர் பேராசிரியர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    மருதகுளம் நேஷனல் பொறியியற் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எச்.முஜீப்ரஹ்மான் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு “ வலிமார்களின் கோமான் அப்துல்காதிர் ஜிலானி அவர்களின் எழுத்தோவியங்களில் ஏகத்துவ அகமியம்” என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவாற்றினார்.    மேலப்பாளையம் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.சலீம்,காயல்பட்டினம் வாவு வஜீகா கல்லூரியைச் சார்ந்த அல்ஹாஜ் வாவு எஸ்.ஏ.ஆர்.இஷ்காஹ், அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குனர் முனைவர் அப்துல் காதர்,கருவூலக்காப்பாளர் முனைவர் பி.ஏ.அப்துல்கரீம், தமிழ்த்துறைப் பேராச

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் வெள்ளநிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

Image
  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் சார்பில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாணவமாணவியர் இப்பணியைத்தொடங்கியுள்ளனர். கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டர்கள் தங்களிடம் உள்ள பொருட்களைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள   நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மையத்தில் 9.12.2015   காலை 8 மணிமுதல் தரலாம்.     வேட்டி, நைட்டி, லுங்கி, துண்டு, சட்டை, சேலை,சுடிதார் போன்ற ஆடைகள், போர்வைகள்,பாய்கள்,டார்ச்லைட், எமர்ஜென்சி விளக்குகள், மெழுகுவர்த்திகள்,பிஸ்கெட் பெட்டிகள்,பால்பவுடர் டின்கள், பாத்திரங்கள்,தட்டு,டம்ளர்கள்,டெட்டால்,அத்தியாவசிய மருந்துகள், தண்ணீர்ப் பாட்டில்கள், செருப்புகள், ரஸ்க், குழந்தைகளுக்கான பால்பாட்டில்கள், கொசுவலைகள்,கொசுவர்த்திகள்,பற்பசை,சோப் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தரலாம்.  9.12.2015 முதல் 13.12.2015 வரை   நிவாரணப்பொருட்களை மாணவமாணவியரோடு பொதுமக்களும் வழங்கலாம். அந்நாட்களில் பெறப்படும் அனைத்

திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

Image
திருநெல்வேலி வானொலி 1.12.1961 அன்று தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 1.12.2015 மாலை 3 மணிக்கு திருநெல்வேலி அகிலஇந்திய வானொலி வளாகத்தில் ஆண்டுவிழா நடைபெற்றது.   நிகழ்ச்சி அறிவிப்பாளர் உமாகனகராஜ், கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.  நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்துத் தலைமையுரையாற்றினார்.  அறிவிப்பாளர் திரு.கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் அறிமுகவுரையாற்றினார்.  அறிவிப்பாளர் சந்திரபுஷ்பம் வானொலிநிலையத்தை வாழ்த்திப் பாடல் பாடினார். எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று, அவர் சிறுகதைகளுக்கு நெல்லை வானொலி தந்த முக்கியத்துவத்தைச் சொல்லி மிக அழகாகப் பேசினார்.  மூத்த ஊழியர் கே.ஆர்.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலையச் செயற்பொறியாளர் இவாஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி தன் தலைமையுரையில், “1961 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று தொடங்கப்பட்ட திருநெல்வேலி வானொலியின் விவசாயப் பண்ணை இல்லப் பிரிவில்தான் தென