Posts

Showing posts from May, 2015

பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் நூல்கள் மலேசியாவில் வெளியீடு

Image
முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.  வண்ணதாசன், இணையத்தமிழ் என்ற இருநூல்களை எழுதியுள்ளார். தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் அவர் எழுதிய சிற்றிலக்கியம், புராணம்,காப்பியயங்கள் தொடர்பான ஆறுபாடங்கள் மின்நூல்களாகப் பாடத்திட்டத்தில் உள்ளன.  சௌந்தர மகாதேவன் என்கிற பெயரில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இடம்பெற்றுள்ளன.  மலேசியாவில் கடந்த சனவரி 29- பிப்ரவரி 1, 2015 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிடப்பட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் இரு நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்த நூல்களில் வைணவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழும் ஆழ்வார்களில் முதல் இருஆழ்வார்கள் குறித்து எழுதியுள்ளார். ஆழ்வார்களின் வரலாறுகளில் கருடவாகனப்பண்டிதர் இயற்றிய திவ்ய சூரிசரிதமும், அதன்பின் பெருமாள் ஜீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி குரு பரம்பரையும் முதன்மையானவை.  வைணவ ஆசாரியரான நாதமுனிகள் பன்னிருஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்து நாலாயி

புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன்

Image
புதுமைப்பித்தன் பிறந்ததினம்: ஏப்ரல் 25 புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன் ................................................................................................................................................................. ·           முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி ·          mahabarathi1974@gmail.com,9952140275 மனம் எனும் வெளியில் தினம் அலைகிற மனிதன் கலைக் கண்கள் பெற்றிருந்தால் அவன் தன்னைப் பாதிக்கிற யாவற்றையும் படைப்பாகப் பதிவுசெய்வான். பொசுக்கி எரிக்கிற சமூகஅவலத்தை அங்கதநடையில் பதிவுசெய்து எள்ளிநகையாடியவர் சொ.விருத்தாசலம் என்கிற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் (1908-1948). புதிதாய் எழுதத் தொடங்குகிற எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவரே ஆத்மகுரு.  சுடலைத் தீ கக்க பஸ்பமாவதற்காகச் சதை பொசுங்கி நிண நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் திருநெல்வேலி வெள்ளக்கோவில் சுடுகாட்டில் மருதாயிப் பாட்டிக்கு முன் எமனைக் கொண்டுநிறுத்தி “காலனும் கிழவியும்” என்று எள்ளிநகையாடியவர்.  பத்திரிகையாளனாய் வாழ்வைத் தொடங்கி வாழ்வின் போலித்தனமான முகங்களின் குரூரமுகமூடிகளை

தன்னம்பிக்கைக் கட்டுரை : தோல்வி நிலை என நினைத்தால்

Image

மழைக்காலப்பொழுது : செளந்தர மகாதேவன்

Image
மழைக்காலப் பொழுதுகளில் கால்களும் கண்களாகின்றன பள்ளத்தை மறைத்து ஓடும் மழைநீரின் மகத்துவத்தைக் கால்களே முதலில் அறியும். மழை சோம்பேறிகளையும் கடிது விரையச் செய்கிறது ஓடுவதைப் பார்க்க ஒதுங்கிநிற்கக் கற்றுத்தருகிறது மழையால் மட்டுமே குடை வள்ளல்களை உருவாக்க முடிகிறது. மேலிருந்தபோதும் கீழ் நோக்கிப் பார்க்கவும் உயரத்தில் விழுந்தாலும பள்ளம் நோக்கிப் பாய மழையால் முடிகிறது. மழையின் நனைத்தலையும்  மழையில் நினைத்தலையும் பெய்தலை அளத்தலையும் மழை சாத்தியமாக்குகிறது தண்மையைத் தனதாக்கி பள்ளத்தைக் குளமாக்கி உள்ளத்தை ரசனையாக்கி கொட்டிக் கொண்டிருக்கிறது அக்னி நட்சத்திரத்தையும் அணைத்த கையால் குளிரவைத்து உங்களுக்கும் எனக்கும் நமக்கும் யாருக்கும் பொதுவாக. . செளந்தர மகாதேவன்

அப்பாவின் சைக்கிள் : செளந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
அப்பாவின் சைக்கிள் அப்பாவைப் போல் அழகானது பேபிசீட்டில் தங்கையை வைத்து கேரியரில் எங்களை வைத்து பாசத்தோடு அழூத்திக் கடந்திருக்கிறார் அழுத்தமாக அழகாக .. பெடல் இடுக்கில் அவர் வைத்த துடைக்கும் துணி இன்னும் கண்களில். . குரங்குப் பெடல் போட்டு நாங்கள் சைக்கிள் பழகியது அவரது ராலி சைக்கிளில் தான் டைனமோ மாட்டும் முன் மண்ணெண்ணெய் முன் விளக்கோடு அவர் வண்டியோட்டிப் பார்த்திருக்கிறேன் பின்னாளில் பொரிகடலைப் பொட்டலம் போன்ற கூம்பு வடிவ விளக்கை சர்வஜாக்கிரதையாக மஞ்சள் துணி கட்டிக் காத்த கதை தனியே எழுதலாம் மின்சாரமற்றுப்போன நடுநிசிப் பொழுதில் தீப்பெட்டி தேடக்கூட நாங்கள் அதைப் பயன்படுத்தியதுண்டு. காற்றடிக்கும் பம்பால் நாங்கள் காதில்கூடக் காற்றடைத்துக் கொண்டதுண்டு காய்கறி வாங்க மாடசாமி மூப்பனார் கடை பலசரக்கு வாங்க சேவியர் பள்ளி செல்ல எல்லாமே அவருக்கு ராலி வண்டிதான் ஆயில் கேன் சைக்கிள் கம்பி இன்னும் வீட்டில் உண்டு ஓட்டமுடியா இயலாமையிலும் அதே ராலி அன்பில் முகப்பிலமர்ந்து பேப்பர் படிக்கும் அன்பு அப்பா * செளந்தர மகாதேவன் .