Posts

Showing posts from 2018

சமகாலப் போக்குகளை உள்வாங்கி எழுதியவர் க.நா.சு.

Image
சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி தமிழ் இலக்கியப் பரப்பில் க.நா.சு. தொடங்கிவைத்த விமர்சன மரபு, புதிதானது, புதிரானது. படைப்பில் அவர் காட்டிய அதே அக்கறையை விமர்சனத்துறையிலும் காட்டினார்.  அவர் முன்வைத்த விமர்சனமுறை குறித்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் தன் நிலைப்பாட்டிலும் தன் கறாரான பார்வையிலும் உறுதியாக இருந்தார்.  நாம் அளவுக்கு அதிகமாய் பழைமையைத் தூக்கிப்பிடிப்பதாய் உணர்ந்தார், உலகில் நடைபெறும் சமகாலப் போக்குகளை ஏன் தமிழ் எழுத்துலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? என்ற கேள்வியை அவர் விமர்சனங்களில் ஆழமாக முன்வைத்தார்.  விமர்சகராகவும் படைப்பாளராகவும் இருதளங்களில் அவர் இயங்கியதால் ஒன்றின் பாதிப்பை இன்னொன்றில் உணரமுடிந்தது. புதுமைப்பித்தன் கதைகள் அவருக்குப் பிடித்தமானது என்றாலும் எல்லாவ்ற்றையும் அவர் கொண்டாடவில்லை, புதுமைப்பித்தன் கதைகளில் முப்பது கதைகள் சிறப்பான கதைகள் என்பது அவர் கணிப்பு.  வாசகரை நினைத்துக் கொண்டு படைப்பாளிகள் கதைகளை எழுதக்கூடாது என்று இலக்கிய விசாரத்தின் முன்னுரையில் அவர் எழுதியுள்ளார்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்(பாகம்-7)-kathir ...

Image

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தவிருக்கும் தேசியக் கருத்தரங்கம்.. தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.

Image
                                        நண்பர்களுக்குப் பகிரவும் .                                     ............................................... சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தவிருக்கும் தேசியக் கருத்தரங்கம்.. அனைத்துத்துறைப் பேராசிரியர்கள் ஆய்வறிஞர்கள் பங்கேற்றுக் கட்டுரைகள் வழங்கலாம்.. பொருள்: தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.

நெல்லை புத்தகத் திருவிழா 2018-திருநெல்வேலியில் மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் 23.9.2018 அன்று வாசிப்பு எனும் வடம் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆற்றிய உரைத்தொகுப்பு

Image

கீர்த்தனாரஞ்சிதம் : இந்து தமிழ் : சௌந்தர மகாதேவன்

Image

தினமலர் மாணவர் சிகரம் கட்டுரை: சௌந்தர மகாதேவன்

Image

தினத்தந்தி நாலாம் பக்கத்தில் சௌந்தர மகாதேவன் கட்டுரை 25.9.2018

Image

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி பேச்சு

Image
                        பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்   சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா மற்றும் மின்னோவியம் குறும்படத் தயாரிப்பு மன்றத் தொடக்க விழா “ சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள்   படைப்பாளியாக இருக்க முடியாது ”   பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதித் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா இன்று 25.09.2018 காலை 11 மணிக்கு நடைபெற்றது.   கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுத் தமிழ்த்துறை உருவாக்கியுள்ள இன்பத் தமிழ் எனும் நூலை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரையாற்றினார்.   கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் முகைதீன் , அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் , பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் மற்றும் கல்லூரியின் அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் , கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் அ.ச. ரா

தன்னம்பிக்கைக் கட்டுரை: தினமலர் என் பார்வை 26.9.2018 : சௌந்தர மகாதேவன்

Image

மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி : சௌந்தர மகாதேவன்

Image
     மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி சங்கரதாஸ் சுவாமி, பம்மல் சம்பந்த முதலியார், தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதுரகவி பாஸ்கரதாஸ் , கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நவாப் ராஜமாணிக்கம், போன்ற கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நாடகத் தமிழ் அதன்பின் கூத்துப்பட்டறை முத்துசாமி, இராமாநுஜம், ஞானி, மு.இராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பூபதி, பிரசன்னா ராமசாமி, பார்த்திபராஜா போன்றோரால் அடுத்த நிலைக்கு நகர்த்தப்பட்டிருப்பதை மறுக்கஇயலாது.  தன்னைப் பாதித்த நிகழ்வுகளை நாடகங்களாக மாற்றுவதில் தனித்துவமான படைப்பாளராக அரைநூற்றாண்டுக்காலமாய் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துசாமியின் நேர்காணல் இன்று ஆழமான பல வினாக்களுக்கு விடைதந்தது.  அவர் நாடங்கள் மண்சார்ந்த பதிவுகளாகவும் சமூகத்தில் புரையோடிய மூடப்பழக்கவழக்கங்களைப் படிமங்கள் மூலம் சாடுவதாகவும் சிறுவயதில் கேட்ட பேய்க்கதைகள் உள்ளிட்ட சுவாரசியமான கதைகளின் வேறுபட்ட வடிவங்களைத் தன்னுள் கொண்டதாகவும் அமைகின்றன.  தெருக்கூத்தைத் தமிழ் நாடகக்கலையின் வேராகக் கருதுபவ

SAHITYA AKADEMI AND SADAKATHULLAH APPA COLLEGE SYMPOSIUM ON RELIGION AND LITERATURE.

Image
SAHITYA AKADEMI   AND  SADAKATHULLAH APPA COLLEGE                  DEPARTMENT OF TAMIL                SYMPOSIUM ON RELIGION AND LITERATURE.                                                   28.8.2018                                                 REPORT:           Sadakathullah Appa College and Sahitya Akademi jointly conducted a symposium on religion and literature on Tuesday, 28 th august 2018 at the college auditorium Sadakathullah Appa College, Tirunelveli.   The inaugural session commenced at 10:00 am. The welcome address and the keynote address was delivered by Sirpi Balasubramanian, convener,  Tamil advisory board, SahityaAkademi, Alhaj.T.E.S. FathuRabbani, secretary, Sadakathullah Appa College, chaired the inaugural session.  The introductory address was delivered by Maalan, General Council Member, SahityaAkademi.    Dr. M. Mohammed Sathik, principal, Sadakathullah Appa College felicitated the gathering.      Religion has nev

சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு

Image
மனம் நிறைந்த தினம் சாகித்ய அகாதெமியுடன் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்திய சமயமும் தமிழும் எனும் உரையரங்கில் பேராசிரியர் சிற்பிபாலசுப்ரமணியம் அவர்களும் எழுத்தாளர் திரு.மாலன் அவர்களும் மிக ஆழமாகப் பேசினார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூன்று எழுத்தாளர்கள் ( திரு.சிற்பி, திரு.தோப்பில் முகமது மீரான்,திரு.வண்ணதாசன்) ஒரே அரங்கில்..எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் விழாவுக்கு வருகைதந்து பெருமை சேர்த்தார்கள். மிக நேர்த்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்த   எழுத்தாளர் திரு.மாலன் அவர்களுக்கு இனிய நன்றிகள். சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு " தமிழ் இலக்கியம் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது" சாகித்ய அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம் பேச்சு: சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியம் எனும் உரையரங்கினை இன்று ( 28.08.2018) காலை 9.30 மணியளவில் நடத்தியது. கல்லூ