Posts

Showing posts from September, 2017

தி இந்து தமிழ் நாளிதழில் இளமை புதுமை பகுதியில் என் கட்டுரை http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece

Image
http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece மகா நிதியாய் மனதில் நின்ற மாணவர் தென்பத்து தெ.ஆறுமுகம் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை, 9952140275 நினைத்துப்பார்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்! என் அன்பு மாணவன் தென்பத்து தெ.ஆறுமுகம் என்றும் மறக்க இயலாத மகாநதியாக மனதுக்குள் பதினெட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான். வெளியே இருக்கும் செய்திகளை மாணவர்களின் உள்ளுக்குள் ஊற்றுவதுமட்டும்தான் கல்வியா? அவர்களின் உள்ளிருக்கும் ஆற்றலை ஏன் வெளிக்கொண்டு வர நாம் ஏன் முயலக்கூடாது என்று எனக்குள் கேட்டுக்கொண்டவானாய் அப்போதுதான் (1998) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையில் விரிவுரையாளராய் பணிக்குச்சேர்ந்தேன். “சமூகநலன் நாடும் சாதனை மாணவர்களை நீங்கள் நம் கல்லூரியில் உருவாக்கவேண்டும்! ” இதுதான் ஆட்சிக்குழு என் ஆசிரியப் பணியின் முதல்நாளில் சொன்ன சொற்கள்!  ஏறக்குறைய என்னிடம் பயின்ற மாணவர்களைவிட ஐந்துவயது மூத்தவனாய் அப்போது இருந்ததால் மாணவ

பாளையங்கோட்டையில் சௌந்தர மகாதேவன் நூல் வெளியீட்டு விழா

Image
பாளையங்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா ............................................................................................................. பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் ச.மகாதேவன் தி இந்து நாளிதழின் ஐந்தாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தி இந்து நாளிதழில் நான்காண்டுகளில்  எழுதிய கட்டுரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு நூல் “ காலத்தின் குரல்” வரும் புதன்கிழமை ( 20.9.2017 )மாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை சைவ சபையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் வெளியிடப்படஉள்ளது.   சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் மு.முகமது சாதிக் வெளியிட அதன் முதல்பிரதியை மேலும் சிவசு அவர்கள் பெற்றுக்கொள்கிறார். இந் நிகழ்வில் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், வரலாற்றறிஞர் திரு.செ.திவான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இறுதியில் ச.மகாதேவன் ஏற்புரை வழங்குகிறார்.

உலகளாவிய அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகருக்குத் திருநெல்வேலி “மேலும்” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது

Image
உலகளாவிய அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகருக்குத் திருநெல்வேலி “ மேலும் ” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது   பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன். ( 70)  எண்பதுகளில் “ மேலும் ”  என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர். படைப்புலகக் கருத்தரங்குகள் வல்லிக்கண்ணன் ,  வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர்.   “ மேலும் ”  வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினைத் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் ,  கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்திக் கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ

செப்டெம்பர் மாத கணையாழி இலக்கிய இதழில் வெளியான நீல.பத்மநாபன் கவியுலகம் : சிந்தை தைத்த சிந்தை முட்கள்

Image
   நீல.பத்மநாபன் கவியுலகம் : சிந்தை தைத்த சிந்தை முட்கள் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி கனியுடைந்து மண்ணில் விழுந்தாலேயொழிய புதுச்செடி துளிர்விடாது கவிதையும் கனியுடையும் அனுபவம் போன்றதே. கனியும் நேரம் கவிஞனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. தேரோடும் வீதி, தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் போன்ற குறிப்பிடத்தகுந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்த மூத்த தலைமுறைப் படைப்பாளர் நீல.பத்மநாபன், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், ஆங்கில மொழிகளிலும் படைப்புகளை உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் வாழும் அவர், அங்கு மாதாமாதம் தமிழ், மலையாளக் கவிதைகளை எழுதி அரங்கேறி வருகிறார். திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் அவருடைய 79 வது பிறந்தநாள் விழாவில் அவர் எழுதிய மலையாளக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. நுட்பமான கவிதை வடிவம் மகா நதியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வை ஆவணப்படுத்தும் அற்புத ஆற்றல் கலைக்கே உண்டு. பாலைக்

தமிழ் இலக்கிய விமர்சகருக்கு மேலும் இலக்கிய அமைப்பின் ஒரு லட்ச ரூபாய் விருது

Image
உலகளாவிய அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகருக்குத் திருநெல்வேலி “ மேலும் ” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது   பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன். ( 70)  எண்பதுகளில் “ மேலும் ”  என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர். படைப்புலகக் கருத்தரங்குகள் வல்லிக்கண்ணன் ,  வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர்.   “ மேலும் ”  வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினைத் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் ,  கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்திக் கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ

தண்ணீர் ஊசிகள் குறித்து தினமலர் ஆசிரியர் திரு.ரமேஷ்குமார் எழுதிய நூல்அறிமுகம்

Image

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியது

Image

தண்ணீர் ஊசிகளுக்கு தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் இன்று கலாரசிகனில் எழுதியுள்ள பத்தி.

Image
திருநெல்வேலி "மேலும் " வெளியீட்டகம் வெளியிட்டுள்ள என் கவிதைத் தொகுப்பான தண்ணீர் ஊசிகளுக்கு தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் இன்று கலாரசிகனில் எழுதியுள்ள பத்தி.