Posts

Showing posts from May, 2016

வாசித்தலே வசித்தலின் அடையாளம் : தி இந்து நாளிதழில் சௌந்தர மகாதேவன்

Image
   இலக்கியக்கடலில் இறங்கி நன்னூல் முத்துகளைச் சேகரிக்கிற இளம் வாசகர்களை வாசகர் திருவிழா பகுதியின் மூலம் ஆற்றுப்படுத்துகிற நன்முயற்சியை ‘தி இந்து’ முன்னதாகவே தொடங்கிவைத்து புத்தகத் திருவிழாவுக்கு அழகான வரவேற்பைத் தருவது பாராட்டக்கூடிய நிகழ்வு.    தமிழகக் கல்லூரி நூலகங்கள் தரமான நூல்களைத் தெரிவு செய்ய ‘தி இந்து’வில் எழுத்தாளர்கள் தரும் புத்தகப்பட்டியல் துணைபுரியும் என்று நம்புகிறேன். புத்தகங்களின் பெயர், பதிப்பகங்களின் பெயர் ஆகியவற்றோடு அவற்றின் விலையையும் உடன்தந்தால் சரியாய் திட்டமிட்டு வாசகர்கள் புத்தகங்களை வாங்க உதவியாய் அமையும்.  தமிழில் தடம்பதித்த சிறப்பான நூல்களை வாசகர்கள் தெரிவுசெய்து வாங்க இம்முயற்சி நிச்சயமாய் துணைபுரியும். எழுத்தாளர்களின் நூல்தெரிவோடு வாசகர்களின் சிறப்பான நூல் தேர்வையும் ‘தி இந்து’ வெளியிட வேண்டும். மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதிப்பகங்களுக்கு உதவும் பொருட்டு இந்த ஆண்டு கழிவேதும் கேட்காமல் முழுவிலையையும் தந்து வாசகர்கள் புத்தகங்களை வாங்கினால் பதிப்பகங்களுக்குப் பேருதவியாய் அமையும் என்று நம்புகிறேன்.  இளம் வாக்காளர்களுக்கான

பயணங்கள் முடிவதில்லை : தினமலர் என் பார்வை , முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
படிக்க : http://www.dinamalar.com/news_detail.asp?id=1529662 முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 பயணமெனும் நகர்வுத் தியானம் உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா   உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விரிபரப்பில் அப்பயணங்கள் நம

"TAMIL MAA MANI AWARD " ,Dr.S.MAHADEVAN,HEAD,DEPARTMENT OF TAMIL,SADAKATHULLAH APPA COLLEGE

Image

முனைவர் சௌந்தர மகாதேவனுக்கு ஸ்ரீ மகா சுவாமி ஜெயந்திவிருது

Image
செயல் அதுவே சிறந்த சொல் என்று வாழ்ந்த மகான் காஞ்சி மகாபெரியவர் அவர்கள்.1992 இல் காஞ்சி பீடம் நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டேன், ஆனால் பரிசு பெறவில்லை.அப்போது தூய சவேரியார் கல்லூரி முதல்வராக அருட்தந்தை இன்னாசிமுத்து அடிகளார் பணியாற்றினார்கள். நான் அப்போது சேவியர் கல்லூரியில் பி.எஸ்.சி.வேதியியல் மாணவன். வகுப்பில் இருந்தபோது கல்லூரி முதல்வராக அருட்தந்தை இன்னாசிமுத்து அடிகளார் அழைத்ததாக அலவலக ஊழியர் சொன்னார்.அவரது அறைக்குச் சென்றேன்.அங்கே காஞ்சிப்பெரியவர் அனுப்பியதாகக் காஞ்சி மடத்திலிருந்து ஒரு பெரிவர் நின்றிருந்தார். “போட்டியில்   வெற்றிதோல்விகள் சகஜம் உங்களுக்குப் பெரியவா பேனா தந்து அனுப்பியுள்ளார்கள்..தொடர்ந்து எழுதுவீர்களாம்” என்றவர் அருட்தந்தை அவர்களிடம் பேனாவைத்தந்து எனக்குத் தரும்படிப் பணித்திருந்தார்.  கண்ணீர் வந்துவிட்டது. “காஞ்சி மகான் வாழ்த்தியபடி நீ நிறைய எழுதவேணும்” என்றார் அருட்தந்தை அடிகளார். சரியாக   இரண்டுஆண்டுகளில் பாரதப் பிரதமரின் சத்பவனா கட்டுரைப்போட்டியில் தேசியமுதலிடம் பெற்றேன்.புதுடெல்லி விக்யான் பவனில் தேசியவிருது வழங்கும் விழா..நன்றாக நினைவிருக்க

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவனுக்குத் தமிழ்மாமணி விருது

Image
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருக்கு   கவிதைஉறவு அமைப்பின் சார்பில் தமிழ்மாமணி 18.5.2016 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது   கவிதைஉறவு இலக்கிய அமைப்பின் தமிழ்மாமணி விருது ................................................................................................................................. பாரதப்பிரதமரின் சத்பவனா தேசியகட்டுரையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனின் தமிழ்இலக்கியப் பணிகளைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் கவிதைஉறவு தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் “தமிழ்மாமணி விருது” வழங்கப்பட்டது.    கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் இயங்கிவரும் கவிதைஉறவு தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்க் கவிதை, படைப்பிலக்கியம், இளையோர் மேம்பாடு, ஊடகம், குழந்தைஇலக்கியம், மனிதநேயம் போன்றவற்றில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்இலக்கியத் துறையில் சிறந்துவிளங்குவோருக்குத