Posts

Showing posts from November, 2015

திருநெல்வேலியில் நூல்கள் வெளியீட்டு விழா

Image
மனதிற்கு நிறைவளித்த நிமிடங்கள்   ரோஜாக்கள் மிக அழகாக இருக்கின்றன, ஏனெனில் அவை ஒருபோதும் தாமரைகளாக மாறமுயல்வதில்லை ஓஷோ சொன்னதாக இன்று காலையில் முகநூலில் படித்தேன்.  நாம் யாரைப்போலவோ மாறநினைத்து இறுதியில் நம் முகத்தையும் நம் அகத்தையும் தொலைத்து வாழத்தொடங்கிவிட்டோம்.  குழந்தைகள் நூலகம் இல்லை, குழந்தைகளுக்குக் கதை சொல்ல நாம் தயார் இல்லை. குழந்தைகள் பத்திரிகை குறித்து நமக்குக் கவனம் இல்லை. குழந்தைகள் கனவுகுறித்து நமக்குக் கவலை இல்லை. குழந்தைகள் குறித்து திருமதி லதா ரஜினிகாந்த் ஆனந்த விகடனில் “அவர்கள் சின்னஞ்சிறுமனிதர்கள்” எனும் தொடர் எழுதினார்கள்.  கல்லூரியில் பயின்றபோது அதற்கு 75 பக்க அளவில் விமர்சனம் எழுதி அனுப்பிவைத்தேன். 1998 ஆம் ஆண்டு சென்னை நூற்றாண்டுவிழா அரங்கில் நடைபெற்ற தி-ஆஸ்ரம் பள்ளிவிழாவில் அதை நூலாக அவர் வெளியிட்டார். கல்லூரி மாணவனான என்னை அப்போது திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் சிறப்புவிருந்தினராய் அழைத்திருந்தார்கள். சமீபத்தில் மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அந்த நூலை வெளியிடவந்திருந்தார்கள்.  திரு.ரஜினிகாந்த் அவர்கள் அந்த நூலை வெளியிட

ஆனந்தவிகடன் சொல்வனம் கவிதை : சௌந்தர மகாதேவன்

Image
எலிகளானோம் நாம்... ....................................................... உன் உயிர் பிரியும் இறுதிநாளுக்கு முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய் மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து பல் துலக்கிப் பலகாரம் உண்டு பாளை பஸ்நிலையம் ஓடி பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மனைத் தரிசித்து மகனைப் பற்றிக் கவலைப்பட்டு மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை நீ அறியாத உன் மரணம் உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது வாளியிலிருந்து சிந்திய தண்ணீர் தரையில் பரவுவதைப் போல் அடுக்களை இருட்டிலிருக்கும் பூனையைக் கவனிக்காமல் அதன் எதிரில் உலவும் எலிகளானோம் நாம் . சௌந்தரமகாதேவன்,திருநெல்வேல ி

அறியப்படாத பாரதி : இந்து தமிழ் இப்படிக்கு இவர்கள்

Image

தன்னம்பிக்கை : தினமலர் என் பார்வைக் கட்டுரைகள் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
உலக மாற்றுத்திறனாளிகள்        சாதனையாளர்கள்

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் நடத்திய தேசிய நூலக வாரவிழாவில் பாளை. பேராசிரியர் சௌந்தர மகாதேவனுக்குப் பாராட்டு

Image
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் 18.11.2015 அன்று 6 மணிக்கு நடத்திய தேசிய நூலக வாரவிழாவில் பாளை. பேராசிரியர் சௌ. மகாதேவனுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.    பாரதப் பிரதமரின் தேசிய விருது மற்றும் மத்திய அரசின் தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழ் பெற்றவர்,  மலேசியா நாட்டில் மலேயாப் பல்கலைக்கழகம் நடத்திய நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் இருநூல்களை வெளியிட்டவர்  பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌ.மகாதேவன். தமிழ்நாடு அரசின் பொதுநூலக இயக்ககம் திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் 18.11.2015 நடத்திய 48 வது தேசிய நூலக வாரவிழா தமிழறிஞர்கள் பாராட்டுவிழா, எழுத்தாளர், வாசகர் தினவிழாவில் சௌ.மகாதேவனின் இளையோர் மேம்பாட்டுப்பணிகளையும் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி நூலகத்துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப்பொன்னாடை போர்த்திப் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம்,வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை,வா

தன்னம்பிக்கைக் கட்டுரை: தினமலர் என் பார்வை : அன்பென்ற மழையிலே நனைவோம்

Image
          நிம்மதியான மனமே நிறைவான வாழ்வின் ரகசியம் ·          முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,       சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 எப்போது பார்த்தாலும் ஏதோவொரு வெறுமை,பேசும் சொற்களில் எப்போதும் சலிப்பு,யாருமில்லாமல் தனித்துவிடப்பட்டதைப்போன்ற உணர்வு,எதையாவது மனதில் போட்டுக் குழப்பி வருத்தத்தோடு வாழும் வாழ்க்கை..நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.  சின்னபலூனுக்கும் ஒருரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக் கண்டபின்னும்கூட நிம்மதி இழந்த மனிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும்கூட மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன்? புரிந்துகொள்ள முடியாத புதிராக நம் வாழ்க்கையை மாற்றியது யார்? மாற்ற முடியாதா இந்தவாழ்வின் போக்கை.   “தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடல் வரி நமக்குத்தான். அர்த்தமற்ற மாயஇலட்சியங்களுக்காக வாழ்வைப் பணயம் வைத்தவர்கள்,வாழ்வின் பொருளே பொருளோடு வாழ்வது என்பதற்குப் பதில், பொருள்தேடி ஓடுவது என்று