Posts

Showing posts from March, 2018

முனைவர் சௌந்தர மகாதேவன் கவிதைகள்

Image

8.3.2018 அன்று தி இந்துவில் வெளியான கட்டுரை தொடர்பாக

Image
2 ..            இணையக் கடிவாளம் இன்றைய தேவை சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி நம் விரல்நுனியில் தகவல்களைக் கொண்டுகொட்டும் இணையத்தின் இன்னொரு இருண்டபக்கத்தை இன்னும் அறியாமல்   நாம் நம் சொந்தத்தகவல்களை இணையதளங்களில் இட்டுநிரப்பிக்கொண்டிருக்கிறோம்.  அவை நம் தகவல்களை விற்று குருரப் பார்வையால் நம்மை வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன்களின் கூட்டணியாக இணையம் மாறி நாம் செல்லும் இடம், பேசும் மனிதர்கள், நமக்கு விருப்பமான உணவுகள், நாம் தேடும் உடைகள் யாவற்றையும் நுட்பமாகப் பதிவுசெய்து வேண்டியவர்களுக்கு விற்றுக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதை உணரமுடிகிறது.  நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், நிறுவனங்களில் நடைபெறும் வாட்ஸ்அப் செய்தித்தொடர்புகள் எல்லாம் ரகசியமாக இன்னொரு நிறுவனத்திற்குக் கடத்தப்படுவதைக் காணமுடிகிறது. எல்லா நாடுகளிலும் ஜிமெயில் மூலமே நடைபெறும் செய்தி மற்றும் ஆவணங்களின் பரிமாற்றத்தின் நிலை இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.  பணமில்லா மின்னனுப் பரிமாற்றத்தின் பாதுகாப்பு குறித்த ஐயம் இன்னும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நம் படங்களைக் கொண்ட போலி மு

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிற்சி நிகழ்ச்சி

Image
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிற்சி நிகழ்ச்சி                 பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி நிறுவனம் , பொங்கு வென்சர்ஸின் ஒரு பகுதியாகத் திகழும் வீட்டன் நிறுவனம் திருநெல்வேலியின் மூன்று சுழற்கழகங்களுடன் இணைந்து 24.03.2018 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 40 தொழில் நிறுவனங்கள் பங்குபெறும் வளாக நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது. பட்டதாரிகள் பங்கேற்கலாம்:                 எம்.ஈ. , எம்.டெக். , எம்.பி.ஏ. , எம்.சி.ஏ. , எம்.ஏ. , எம்.எஸ்.சி. , எம்.காம். , பி.ஈ. , பி.டெக். , பி.ஏ. , பி.எஸ்.சி. , பி.காம். , பி.பி.ஏ. , பி.சி.ஏ. , ஹோட்டல் மேனேஜ்மென்ட் , ஐ.டி.ஐ. , டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியர் இவ்வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம். பதிவுக்கட்டணம் ஏதுமில்லை. வணிகரீதியாக நடத்தப்படாமல் தென் மாவட்டப் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில்