Posts

Showing posts from March, 2015

சௌந்தர மகாதேவன் கட்டுரை

Image

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.வெ.இராமசுப்பிரமணியன் அவர்களின் சிறப்புரை

Image

நகுலன் கவிதைகள் :சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி

Image
                   அகில இந்திய வானொலி                         தமிழமுது உரை                                      முனைவர் ச.மகாதேவன்   நகுலன் கவிதைகள் தேடலின் தமிழ்வரிகள்.ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன.   நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால் “திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.” காலத்தை ஓர் இடமாக உருவகம் செய்கின்றன நகுலன் கவிதைகள்.

தமிழ்முரசு Tamil Murasu: காணாமல்போகும் கடித இலக்கியம் -முனைவர் சௌந்தர மகாதேவன்

தமிழ்முரசு Tamil Murasu: காணாமல்போகும் கடித இலக்கியம் -முனைவர் சௌந்தர மகாதேவன்

தெளிவார்கள்

Image
எதுவும் தெரியதில்லை என்கிறார்கள் யாரவது யாரையாவது பார்த்துத் தினமும். தெரிந்து என்ன ஆகப்போகிறது? தெரியாமலிருப்பவனே தெருவோரம் நிம்மதியாய் நித்திரை புரிகிறான். சுருட்டிவைத்த பழையதுணி மூட்டைகளோடு மங்கம்மாசாலையில் அலைபவனைச் சித்தபிரமை பிடித்தவனென்று பால்பூத் அண்ணாச்சி சொன்னார். சொன்னதைக் கேட்டுத்தொலைத்தானோ என்னவோ எல்லாம் விட்டுச் சுதந்திரமாய் திரிந்தவன்-அதன்பின் மூட்டைகளையும் விட்டுவிட்டு வேறிடம் போய்த்தொலைந்தான்.   விட்டுவிடுதலையானவனையும் விட்டுவிடமறுக்கிறோம். அவர்கள் சொன்ன முன்னைச்சொற்றொடர் போல் தெரியாமல் சொல்கிறார்கள் சொல்லிவிட்டுப்போகட்டும் தெளிவார்கள் பின்தொடரும் ஏதேனுமொரு நாளில். * சௌந்தர மகாதேவன்

திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் "மனத்துளி" 'கவிதை நூல் வெளியீட்டுவிழா

Image
  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்   மாணவர் பேரவை நிறைவு வி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்   17.3.15 அன்று காலை 10 மணிக்கு மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் திரு.சுமித்சரண் I.P.S. அவர்கள் , சிறப்பு விருந்தினராய் பங்கேற்றுத் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து தயாரித்துள்ள “ மனத்துளி ” எனும் மாணவர் கவிதைநூலை வெளியிட்டார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்திப்பேசினார். அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குநர் பேராசிரியர் நவராஜ் சந்திரசேகர், பேரவைத் தேர்தல் ஆணையர் பேராசிரியர் கே.ரபி அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அதன் முதல்பிரதியை கல்லூரி ஆட்சிக்குழுவின் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக்அப்துல்காதர் பெற்றுக்கொண்டார். ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் ,பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் பேரவைத் தலைவர் முஹம்மது அப்சர் வரவேற்றுப் பேசினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். படத்தில்: சதக்கத்துல்லாஹ