Posts

Showing posts from August, 2016

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாவலர் அறிவுமதி

Image
.............................................................................................................................. திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு மாணவர்பேரவை இணைந்து   நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா 30.8.2016 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெறும்.இவ்விழாவின் சிறப்புவிருந்தினராக தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்கள் கலந்துகொண்டு “ கவிதை எனும் பூங்காற்று” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்கள்.அதோடு மாணவர் பேரவையின் புதிய நன்முயற்சியான, ஆதரவற்றோருக்கு உதவும்நோக்கில் மாணவர்கள் இணைந்து நடத்தஉள்ள “ மனிதம்” எனும் மாணவர் சேவை அமைப்பைத் தொடங்கிவைக்கிறார்கள்.இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கத் தமிழ்த்துறை சார்பிலும் மாணவர்பேரவை சார்பிலும் அன்புடன் அழைக்கிறோம்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ப் பேரவை தொடக்கவிழா

Image

St.MARYS COLLEGE ,THOOTHUKUDI, VEDHA NAYAKAR MUTAMIL MANDRAM ; Dr.S.MAHADEVAN SPECIAL ADDRESS

Image

அசோகமித்திரன் என்கிற ஞானபீடம் * பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,

Image
          பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ( தன்னாட்சி ) , ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011. அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியதும் மனம் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்தது. நீண்டகதாநதியாய் பெருக்கெடுத்து மனிதசமுத்திரம் நோக்கியோடி மிக ஆழமாய் தன் பார்வையைத் தன் படைப்பிலக்கியங்கள் மூலம் தரும் அசோகமித்திரன் படிப்புலகம் அன்புவயமானது, கிண்டல் தொனி நிறைந்தது. தன்னைப் பற்றிய அதீதமான உயர்மதிப்பீடுகள் ஏதுமின்றி,மிக இயல்பாக 84 வயதிலும் கதையுலகில் இயங்கிவரும் தியாகராஜன் எனும் இயற்பெயரை உடைய அசோகமித்திரன் என்கிற அபூர்வ எழுத்தாளர் மூத்த தலைமுறை எழுத்தாளர் வாழ்வின் துயரங்களை உயரத்திலிருந்து பார்த்தவரல்லர். அன்பின் பரிசு என்கிற வானொலி நாடகம் அவர் எழுதிய முதல் படைப்பாகும். கலைமகளில் வெளியான “ ஒரு நாடகத்தின் முடிவு” எனும் படைப்பு அவரை ஐம்பதுகளில் தமிழ்ச் சிறுகதையாசிரியராக அடையாளம் காட்டியது. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலமை உடையவர் அசோகமித்திரன். உலக இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உண்ட

மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ்மாநாட்டில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் பங்கேற்பு

Image