Posts

Showing posts from January, 2015

சனவரி 29 முதல் பெப்ரவரி 1 (2015) : மலேசியாவில் நடைபெறும் ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சில எதிர்பார்ப்புகள் :

Image
  முனைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் , தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 mahabarathi1974@gmail.com ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குத் தயாராகிறது மலேசியா. அரசியலுக்கு அப்பால், உண்மையான தமிழ்வளர்ச்சி என்ற நோக்கோடு புலம்கடந்து நடத்தப்படும் ஆராய்ச்சி மாநாட்டில் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெருமுயற்சியால் முதலாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டு பாரிஸ் ( பிரான்ஸ்),1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (இலங்கை),1981 ஆம் ஆண்டு மதுரை (தமிழ்நாடு),1987 ஆம் ஆண்டு கோலாலம்பூர் (மலேசியா),1989 ஆம் ஆண்டு மொரிசியஸ், 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்த ஆண்டு சனவரி 29 முதல் பெப்ரவரி 1 (2015) வரை நான்கு நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறஉள்ளது. மலாயாப் பல்