Posts

Showing posts from June, 2017

தினமலர் என் பார்வை : சௌந்தர மகாதேவன் தன்னம்பிகைக் கட்டுரை

Image

சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” கவிதை நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை

Image
சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” கவிதை நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை தண்ணீர் ஊசிகள் ........................................ ஏற்கனவே நமக்குத் ‘தண்ணீர்ச் சிற்பம்’ தெரியும். இது ‘தண்ணீர் ஊசிகள்’. நிலம் கிழிந்தால் நீர் தைக்கும். நிலத்தை யார் கிழிக்கிறார்கள் என்பதொரு பெரும் கேள்வி. சௌந்தர மகாதேவன் தையல்காரர். திருநெல்வேலியின் அத்தனை தெருக்களிலும் தன் தையல் இயந்திரத்தைத் தள்ளிக்கொண்டே போயிருக்கிற ஒருவர். வெயிலறிந்தவன் எப்போதும் மழை அறிவான். நிலம் அறிந்தவன் நீர் அறிவான். அறிந்திருக்கிறார். முதல் கவிதையிலே சொல்லிவிடுகிற வெளிப்படை. கவிதை என்பது அவருக்கு நினைவின் அடையாளம். நிறைய வாழ்ந்தவருக்கு நிறைய நினைவுகள். நிறைய அடையாளங்கள். நிறையக் கவிதைகள். சின்னத் தாத்தா, திம்மராஜபுரம் காந்திமதி அக்கா,(எங்களுக்கு எல்லாம் திம்மராஜபுரம் என்றால் ஜோதிவினாயகம் தான்), நீலகண்டன் பிள்ளை, முப்பிடாதியக்கா, விபூதிப் பாட்டி, மருதையாத் தாத்தா, மயிலக் கோனார், தட்டாக்குடித் தெரு சரசுப் பெரியம்மை, தெப்பக்குளத் தெரு செண்பகத்தக்கா, சுப்பாராய

சௌந்தர மகாதேவன் கவிதைகள் தொகுப்பு : தண்ணீர் ஊசிகள்

Image
சௌந்தர மகாதேவன் கவிதைகள் தடம் .......... யார் வந்தாலும் அடையாளமாய்   எதையாவது   விட்டுச் செல்கிறார்கள் . பாட்டியின் வெள்ளைமுடி பட்டாசல் முழுக்கப் பறக்கும் . சின்னத் தாத்தா வந்துசென்றபின் ஒருவாரம் மூக்குப்பொடி வாசம் வீடுமுழுக்க வீசும் . பிள்ளைகள் முழுப்பரிட்சை லீவுக்கு வந்தால் வீடெலாம் குட்டிக் கார்ப்பொம்மைகள் . திம்மராஜபுரம் காந்திமதியக்கா தயிர்விற்க வந்த தடம் வெள்ளைச்சுவரில் நீள்தீற்றல்களாய் . பெரியம்மா வாழ்ந்துசென்ற அடையாளமாய் அவள் காசியில் வாங்கிவந்த கங்கைச்செம்பு . இப்படி எல்லோரும் ஏதோவொரு   அடையாளத்தைத் தான் வந்ததன்   தடமாய் விட்டுச் செல்கிறார்கள் என் நினைவின் அடையாளமாய்   நான் எழுதுகிற இந்தக் கவிதைமாதிரி . *

சௌந்தர மகாதேவனின் "தண்ணீர் ஊசிகள்" கவிதை நூலை பேராசிரியர் சிவசு வெளியிடுகிறார்

Image
பாளையங்கோட்டை பேராசிரியர் சிவசுவின் வேறுபட்ட இலக்கியமுயற்சி தன்னிடம் படித்த மூன்று தலைமுறை மாணவர்களின் இலக்கிய நூல்களைத் “மேலும்” வெளியீட்டகத்தின் மூலம் வெளியிடுகிறார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன் (70) எண்பதுகளில் மேலும் என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர். படைப்புலகக் கருத்தரங்கு வல்லிக்கண்ணன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். “மேலும்” வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில்  சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும், கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர்  ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்ல

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்

Image
கவியரசர் பேசிய பள்ளியில் கவியரசர் குறித்து பேசிய நிமிடங்கள் நேற்று காலை இலஞ்சிக்குள் நுழைந்தபோது குற்றாலச்சாரல் முகத்தில் சில்லென்று காற்று வீசி வரவேற்றது.நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இலஞ்சி இராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு இலக்கிய மன்றத் தொடக்கவிழா கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 91 வது பிறந்தநாள்விழா. இரண்டாயிரம் மாணவ மாணவியர் திறந்தவெளிஅரங்கில் அமர கவியரசர் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு நிகழ்வு தொடங்கியது.  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நண்பர் பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் செ.தங்கபாண்டியன் முன்னிலையில் கண்ணதாசன் கவிதைகள் குறித்துப் பேசத் தொடங்கினேன்.  பன்னீர் செம்பாய் வானம் மாறி மெலிதாய் சாரல்துளிகளை எங்கள் மீது வீச கண்ணதாசனுக்குள் கவிதையாய் நுழைந்தோம். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி தென்றலும் எங்களோடு இருந்தது. உலகம் பிறந்து எனக்காக.. பாடலில் தொடங்கி மயக்கமா கலக்கமா பாடலில் தொடர்ந்து முப்பது நிமிடங்களைக் கவியரசர் எடுத்துக்கொண்டார்.  பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் செ.தங்கபாண்டியன் கவியரசரின் நண்பர் சிவாஜி குரலில் இன்று உங்கள்

திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பின் நிகழ்வுகள்

Image