Posts

Showing posts from February, 2016

குறியீடுகளின் படைப்புநாயகன் உம்பர்டோ ஈக்கோ : முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

Image
குறியீடுகளின் படைப்புநாயகன் உம்பர்டோ ஈக்கோ முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி   உலகம் அதிசய அபூர்வக் குறியீடுகளின் இயங்குதளம், இயற்கை குறியீட்டுமொழியில் நமக்கு ஏதோவொரு செய்தியை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம்தான் பொருள்புரியாமல் பொருளற்ற வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று உம்பர்டோ ஈக்கோவை வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.  இத்தாலிய நாவலாசிரியர் உலகின் புகழ்பெற்ற குறியீட்டியல் அறிஞர் உம்பர்டோ ஈக்கோவின் “ ரோஜாவின் பெயர்” நாவலைத் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தி இந்து கலைஞாயிறு இறுதிஅஞ்சலி செய்திருப்பது மனநிறைவை அளிக்கிறது. மொழியும் புவிசார் எல்லைகளுக்கும் அப்பால் இலக்கியத் தளத்தில் யாவரும் ஒன்றே என்று இந்து மற்றுமொருமுறை மெய்ப்பித்திருக்கிறது. நாவலுக்கான வடிவமும் நாவலுக்கான பழைய வரையறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை உம்பர்டோ ஈக்கோவின் படைப்பிலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதில் படைப்பின் சூட்சுமம் இல்லை,புதிர்போன்ற, விடுகதை போன்ற எதிர்பார்ப்பு மேடைகளில்தான் படைப்பிலக்கியம் உருவாக முட

உலகத் தாய்மொழி தினம் :முனைவர் சௌந்தர மகாதேவன் தினமலர் என் பார்வை கட்டுரை

Image

இன்று உலகத் தாய்மொழிகள்தினம் தினமலர் என் பார்வைக் கட்டுரை

Image
உலகதாய்மொழிதினம் ;பிப்ரவரி 21               தமிழ்மொழி என்னும் விழி பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி mahabarathi1974@gmail.com , cell 9952140275 நம் தாயிடமிருந்து கற்கும்மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழிதான். நம் விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது. தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ் , எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று . பண்பாட்டோடு தொடர்புடைய மொழி . உலகம்முழுக்க எட்டுகோடி தமிழர்களின் தாய்மொழியாய் உள்ள தமிழ்மொழி திராவிடமொழிகளின் தாயாகத் திகழ்கிறது.    உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில் பிறந்து நீண்டதொல்மரபின் தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி நம்மருமைத் தாய்மொழி. ஆதிநாகரீகத்தின் சாட்சியாய் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் ப

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

Image
             பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி mahabarathi1974@gmail.com , cell 9952140275 நம் தாயிடமிருந்து கற்கும்மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழிதான். நம் விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது.  தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ் , எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று . பண்பாட்டோடு தொடர்புடைய மொழி . உலகம்முழுக்க எட்டுகோடி தமிழர்களின் தாய்மொழியாய் உள்ள தமிழ்மொழி திராவிடமொழிகளின் தாயாகத் திகழ்கிறது.      உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில் பிறந்து நீண்டதொல்மரபின் தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி நம்மருமைத் தாய்மொழி. ஆதிநாகரீகத்தின் சாட்சியாய் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது . உலகத்தமிழ்