Posts

Showing posts from April, 2017

கடிதம் - தினமலர் என் பார்வை - பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

Image
                    நலம் நலமறிய ஆவல்.. .................................................................................................................................................... முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் சொந்தக் கையெழுத்தில் எதையாவது நீங்கள் எழுதி எத்தனைநாட்களாயிற்று! எழுத்து எத்தனை சுகமான அனுபவம்.வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது.”நலம் நலமறிய அவா” என்று தொடங்கி மற்றவை நேரில் என்று முடித்து அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி யுகமாகிவிட்டது.கிர்ரென்ற சப்தத்தோடு பித்தளைப் பாத்திரத்தில் அழகான கையெழுத்தில் நம் பெயரை எழுதித்தருகிற மனிதர்கள் குறைந்து போய்விட்டார்கள். எழுத்தைத் தொலைத்த எந்திரவாழ்க்கை இனிமையை இழத்தல் எத்தனை கொடூரமானது! வானத்தில் பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பார்ப்போரைக் கழுத்துவலிக்கத் திரும்பிப் பார்க்கவைப்பதுபோல் பலரையும் திரும்

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களின் 79 ஆவது பிறந்தநாள்விழா

Image
                      நினைவுத் தடங்கள் எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களின் 79 ஆவது பிறந்தநாளன்று (26.4.2017) “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் நடத்திய நீலபத்மம் தலைமுறைகள் விருது வழங்கும் விழாவுக்குச் சென்றோம்.  அப்போதுதான் எழுத்தாளர் திரு.நீல.பத்மநாபன் அவர்களை முதன்முதலில் சந்திக்கிறேன். சிவசு அய்யா அறிமுகம் செய்துவைத்தார். தாடிக்குள் கனிவான புன்னகை. கண்களில் வலியோடு வந்திருந்தார். தமிழ்நாட்டு விழாக்கள்போல் அந்தவிருது வழங்கும் விழா நடைபெறவில்லை.ஒவ்வொரு மாதமும்  திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிதை வாசிப்பு, சிறுகதை வாசிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.சிறந்த சிறுகதை,சிறந்த கவிதை தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்பட தன் பிறந்தநாளில் அவர்களுக்கு நீலபத்மம் தலைமுறைகள் விருதினைக் கடந்த இருபது ஆண்டுகளாய் திரு.நீல.பத்மநாபன் வழங்கிவருகிறார்.  பேராசிரியர் மேலும் சிவசு தற்காலத் திறனாய்வுப் போக்குகள் குறித்து மிகவிரிவாகப் பேசினார்.மேடையில் இருப்பதைத் தவிர்த்து ஆர்வலர்களோடு கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.  விருது வழங்கிய நடுவர் குழுவின் சார்பி

கோடைவிடுமுறையை அனுபவிக்கக் குழந்தைகளை அனுமதியுங்கள்

Image
http://www.dinamalar.com/news_detail.asp?id=1758878 பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி முழுஆண்டுத்தேர்வுகள் முடிந்துவிட்டன. புத்தகங்களை மூடிவைத்துவிட்டுக் குதூகலமாய் குழந்தைகள் தெருவுக்கு விளையாட வந்துவிட்டன. யோகா, நீச்சல், கராத்தே,ஓவியம், அபாக்கஸ், இசை, ஆங்கிலப் பேச்சு என்று சம்மர் வகுப்புகளுக்கு அனுப்பப் பெற்றோர்கள் அவர்களிடம் சம்மதம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மாநிலஅளவில் சாதிப்பதற்காய் அடுத்த வகுப்புகளை விடுமுறையிலேயே நடத்தச் சிலபள்ளிகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. விடுமுறைக் கொண்டாட்டம் இருபதாண்டுகளுக்கு முன் கோடைவிடுமுறை பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்தது காரணம் ஆண்டுமுழுக்கப் படித்த படிப்புச்சுமையிலிருந்து ஒன்றரை மாதங்கள் ஒதுங்கி இருபதற்கான விடுதலைக் காலமாக அந்த விடுமுறைக் காலம் இருந்தது. நம் நினைவேட்டில் பல நினைவுகள், சில செல்லரித்து, சில சொல்லரித்து.. தொலைதாரத்தில் உள்ள தாத்தா பாட்டி ஊருக்குப் பயணித்து அந்த மண்மணம் கமழும் கிராமத்தில் சேற்றுவயலாடி  ஆற்றுவழியோடி மீன்பிடித

உலகப் புத்தக நாள் விழாவில் பாராட்டு

Image
  உலகப் புத்தக நாள் விழாவில் திருநெல்வேலி மாவட்ட மையநூலகம் சார்பில் தமிழ்அறிஞர்களை, எழுத்தாளர்களைப் பாராட்டும் நிகழ்வு 23.4.2017 மாலை  6  மணிக்கு நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பூ.முத்துராமலிங்கம் அவர்களும்,பாளையங்கோட்டை சிறைத்துறைக் கண்காணிப்பாளர் திரு.கோ.பா.செந்தாமரைக்கண்ணன் அவர்களும் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று எங்களைப் பாராட்டினார்கள்

தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழா

Image
தச்சநல்லூர் வேதிக் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஜான் டி பிரிட்டோ சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பும் நிறைவும்.மறக்க முடியாத விழா. முகநூல் நண்பர் திரு.செல்வராஜ் அவர்கள் அழைத்திருந்தார்.

திருமால் நகர் வள்ளலார் தமிழ்மன்ற நான்காம் ஆண்டுத் தொடக்கவிழா

Image
திருநெல்வேலி திருமால்நகர் வள்ளலார் தமிழ்மன்ற நான்காமாண்டுத் தொடக்கவிழா மத்திய அரசு ஒரேநாள் இரவில் கறுப்புப் பணத்திற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது திருநெல்வேலி பாலாஜி உணவக உரிமையாளர்கள் கோவிந்தன், விஷ்ணு ஆகியோர் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எங்கள் உணவகத்தில் சாப்பிடலாம் என்று அறிவித்ததும் முகநூலிலும் பத்திரிகையிலும் அவர்கள் உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்டதும் நினைவிருக்கும்.  பாலாஜி உணவக உரிமையாளர்  கோவிந்தனின் தந்தை சு.பிச்சையா பணிநிறைவுபெற்ற தலைமையாசிரியர், திருநெல்வேலி திருமால்நகர் மக்கள் சங்கத் தலைவராய் பொறுப்பேற்று சங்கப்பணிகள் பார்த்துக் கொண்டிருந்தவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வள்ளலார் பெயரில் வள்ளலார் தமிழ்மன்றம் தொடங்கி தன் மகள் வீட்டு முற்றத்தில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை தமிழறிஞர்களைக் கொண்டு தமிழ் மொழி தொடர்பான தமிழ்ப் பண்பாடு தொடர்பான கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் அந்தத் தமிழ் அமைப்பில் தலைவர் செயலாளர் பொருளாளர் யாரும் இல்லாமல் பெண்கள் குழந்தைகளைக் கொண

தினமணி இளைஞர்மணிக்கு நன்றி

Image
தினமணி இளைஞர்மணி இதழில் என் முகநூல் கவிதைகள் வெளிவதுள்ளதை புதுடெல்லி அகிலஇந்திய வானொலியில் நிகழ்ச்சித் தாயாரிப்பாளராய் பணியாற்றும் நண்பர் திரு.கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்கள் உள்பெட்டிமூலம் அனுப்பியிருந்தார். அவருக்கும், தொடர்ந்து வெளியிடும் தினமணி ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி.

திருநெல்வேலி தினகரன் நடத்திய கல்விக் கண்காட்சியில் சிறப்புரையாற்றிய பதிவுகள் 7.4.2017

Image

மகிழ்ச்சியாய் இருப்போம் மலர்ச்சியாய் வசிப்போம்

Image
              http://www.dinamalar.com/news_detail.asp?id=1746594 பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்கப் பிடிக்காது? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்? . வாழ்வே வெறுமையாக இருக்கிறது! ஏதும் பிடிக்கவில்லை, எல்லாம் முடிந்துபோய்விட்டது இனி என்ன செய்யப்போகிறேன் என்ற எண்ணம் ஏற்படுகிறதா? நான் தொட்டதெல்லாம் ஏன் தோல்வியாகிறது, என் கை பட்டதெல்லாம் ஏன் நட்டமாகிறது  என்ற கேள்வியை பலநேரங்களில் நாம் நமக்குள் கேட்டுக்கொண்டேதானிருக்கிறோம். நமக்கு இத்தனை வயதானபின்னும், இவ்வளவு படித்தபின்னும்  இன்னும் மகிழ்ச்சியாய் வாழப் படிக்கவில்லை என்பதைத்தான் இதுகாட்டுகிறது. வாழ்வு ஒரு வசந்த கலை அன்பிற் சிறந்த தவமில்லை என்றான் பாரதி. அன்புதான் மகழ்ச்சியை மலர்போல் மலரவைக்கிறது. தேங்காய்ச் சில்லுக்கு ஆசைப்பட்டு எலி எலிப்பொறிக்குள் மாட்டி எமனுக்கு எதிர்ப்படுகிறது. மேலே தூண்டில் இருப்பதை அறியாமல் புழுவைப் புசிக்க ஆசைப்பட்டு மீன் தூண்டிலில்