Posts

Showing posts from April, 2015

ஆனந்தமாய் வாழ ஆசையா? * பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
                          யாருக்குத்தான் ஆனந்தமாய் வாழ ஆசை இருக்காது? ஆனால் எப்படிஆனந்தமாய் வாழ்வது என்பதுதான் தெரியவில்லை.   ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் நிமிடங்களை விட்டுவிட்டுக் கவலைகளின் சவலைப் பிள்ளைகளாய் ஏன் வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோமே ஏன்? ·            தங்கக் கடைகளிலும் குழந்தைகள் தேடுவது சாதாரண பலூன்களைத்தான். நிம்மதியான மனமே ஆனந்தத்தின் சந்நிதி; ஆனந்தமனம் இறைவன் உறையும் அரூபபீடம். இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்க நாமொன்றும் கடிகாரமுட்களன்று மனிதர்கள் என்பதை மறவாமலிருப்போம். ·             வாழ்க்கை என்பது வரமா? சாபமா? என்ற வினாக்கள் வேறு.சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப் பிடிக்காமல் தூரநின்று ரசித்துப் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகான வரமென்று புரியும். ·          “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று குமரகுருபரசுவாமிகள் அழகாக ஆனந்திக்கச் சொன்னதை அறிவோமா? ·            யார்வாழ்வில் சவால்கள் இல்லை? யார் வாழ்வில் சங்கடங்கள் இல்லை? முள்ளுக்கு மத்தியில்தான் ரோஜா, ராஜாவாகக் கொலுவீற்றிருக்கிறது. கண்ணீரைச் சிந்தும் கண்களுக்கருகில்தான் சிர

திருநெல்வேலியில் கண்முன்னே விரியும் கடல் நூல் வெளியீட்டு விழா

Image
கடலாய் விரியும் திருநெல்வேலி .......................................................................... திருநெல்வேலியை எனக்கு ரசிக்கக் கற்றுத் தந்தவன் என் நண்பன் பாலாதான். வண்ணதாசனின் அகம்புறம், சுகாவின் மூங்கில் மூச்சு, கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் நூல்களுக்குப் பிறகு நாறும்பூவின் மூன்றாம் படைப்பு. நெல்லையை முகநூலில் இவ்வளவு அழகாகக் காட்ட முடியுமா? கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாயோடு காரகாராசேவோடு நெல்லை புகுந்த நாறும்பூ படைத்த முகநூலின் பதிவுகள் நூலாய் எழுத்தாளர் நாறும்பூநாதன் கைவண்ணத்தில் “கண்முன்னே விரியும் கடல்” நூல். மரியா காண்டீன்,லூர்துநாதன் சிலை,சுலோசனமுதலியார் பாலம்,திருநெல்வேலி டவுண்,ராயல் தியேட்டர் என்று விரிகிறது அந்த நூல். வெளியீட்டு விழாவில் பங்கேற்றோம். பொழுது போக்குக் களம் என்பதை உடைத்து அவர் கடந்த ஒன்பது மாதங்களாய் சமுதாயத்தைப் பழுதுபார்க்கும் களமாக மாற்றியிருந்ததை வெகு நேர்த்தியாய் நூலாக்கியிருந்தார்.கண்முன்னே உண்மையில் முகநூல் நண்பர்கள் கடல்.இருக்கஇடமில்லை..நிரம்பிவழிந்தது கூட்டம்.உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தவர் என்பதால் நண்பர்கள் திரண்டுவந்திருந