Posts

Showing posts from January, 2016

திருநெல்வேலியில் 'மேலும்" இலக்கிய அமைப்பு நடத்திய தமிழ்-2015

Image

“மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பு திருநெல்வேலியில் நடத்தும் தமிழ்-2015

Image
   2015 இல் தமிழ்இலக்கியப் போக்குகள் குறித்த இருநாள் கருத்தரங்கு திருநெல்வேலியில் இயங்கிவரும் “மேலும்”தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் தமிழ்படைப்பிலக்கியம், ஊடகம் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளன. அக்கருத்தரங்கு குறித்து “மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு, தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்இலக்கியம் குறித்த திறனாய்வுப் போக்கை ஆய்வுநோக்கில் கல்விப்புலங்களில் வளர்க்கும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் தமிழகக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயிலும் இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தமிழ்ப்படைப்புலகம் குறித்த கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்த்திறனாய்வாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ 25000 பொற்கிழியையும் ‘மேலும்’ திறனாய்வாளர் விருதினையும் வழங்கிவருகிறது.தமிழ்ப்படைப்பிலக்கியத்துற

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தி.க.சி.குறித்த நூல் வெளியீட்டுவிழா

Image
திருநெல்வேலியில் வாழ்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற திறானாய்வாளர் தி.க.சி. குறித்த நூல் வெளியீட்டுவிழா பாளை. பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 13.1.2016 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.  சீதக்காதி தமிழ்ப்பேரவை மற்றும் கல்லூரியின் மாணவர் பேரவை இணைந்து நடத்திய நூல்வெளியீட்டு விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்பேசினார்.  கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.  திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் உதவிநிலைய இயக்குநர் மு.சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  105 தமிழ் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் செ.திவான், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி, வரலாற்றறிஞர் செ.திவான் எழுதிய “ தி.க.சி.என்றொரு மானுடன்” எனும் நூலை வெளியிட சிவகாசி அய்யநாடார் கல்லூரி மேனாள் ஆங்கிலப்பேராசிரியர் எம்.இராமச்சந்திரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார