Posts

Showing posts from April, 2018

தினகரன் கல்விக் கண்காட்சியில் சௌந்தர மகாதேவன் உரை

Image

Dr.S. MAHADEVAN, HEAD,DEPARTMENT OF TAMIL,SADAKATHULLAH APPA COLLEGE,TIRUNELVELI

Image

அகில இந்திய வானொலி, திருநெல்வேலி தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம்

Image
         அகில இந்திய வானொலி, திருநெல்வேலி                 தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம் கவியரங்கம் அதுவும் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கடையநல்லூர் மனோ கல்லூரியில் கவியரங்கம் என்றதும் பெருமகிழ்ச்சி. திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தலைவர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், அறிவிப்பாளர் திருமதி உமா கனகராஜ் , கடையநல்லூர் மனோ கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் தமிழ்ப் புத்தாண்டுக் கவியரங்கம் 7.4.2018 அன்று கடையநல்லூரில் நடைபெற்றது.நிகழ்ச்சி சித்திரைத் திருநாளில் ஒலிபரப்பாகிறது.                    நெகிழி இல்லா நகரம் பேராசிரியர் ச.மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி புவியரங்கின் கலைப் பிரியனே கவியரங்கின் தலைக்கவிஞனே செவியரங்கு நிறைக்கக் கவிப்பொங்கல் படைக்கவந்த செந்தமிழ்ப் பாவலனே தமிழ்போல் நீ வாழ வேண்டுமென வாழ்த்திச் சிரம்தாழ்த்தி கரம்கூப்பி வணங்கி என் கவி தொடக்கம். காட்டாறு பெருக்கெடுக்கும் முல்லைத் திணையிலே நம் செவியாறு குளிர வைத்து பாட்டாறு குறளாறு சொல்லாறு தினம் பொழியவைக்கும் நம் நெ

இணையப் பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்: பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

Image
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2018/04/06/ArticleHtml இணையப்பயன்பாட்டில் கவனமாய் இருங்கள் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 இணையம் இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். எல்.கே.ஜி.குழந்தைகள் முதல் எம்.பி.பி.எஸ். பயிலும் மருத்துவ மாணவர்கள் வரை அன்றாட வாழ்வில் இணையத்தின் பாதைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். பெட்டிக்கடைகளில் பலசரக்கு வாங்கிய நிலை மாறி இணையக் கடைகளில் நாம் விரல்களால் விற்பனைச் சந்தைக்குள் நுழைந்து நாட்களாகிவிட்டன. ரயில்முன்பதிவு, மின்கட்டணம் செலுத்துதல், இணையவங்கிச் சேவை என்று இணையவாசிகளாகிவிட்டோம். சில நொடிகள் இணையவேகம் குறைந்துபோனால்கூட   நம்மால் தாங்க முடியா அளவு மனச்சோர்வுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் கூட அவற்றிலிருந்து விலகி தலை குனிந்தபடி நம் கையிலுள்ள ஸ்மார்ட் போன்களின் செயலிகளுக்குள் நுழைந்து எதையாவது தேடிக்கொண்டிருக்கும் கவனமற்றவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றோம்.. நம் இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்து இரண்டொரு

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் கல்யாண்ஜி கவிதைகள்

Image
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி மதியம் கொளுத்தும் வெயில் பாபநாசம் நோக்கிப் பயணித்தேன். காருக்குறிச்சி தாண்டியதும் முகத்தில் சில்லென்ற காற்று.வெயிலையும் மீறி முகத்தில் அறைந்தது.நெல்வாசம் நாசியை வருடியது.  பாபநாசத்தில் வெயில் வறுத்தெடுத்தது. பாபநாசம் கோவிலுக்கு எதிரே சலசலத்தபடி தாமிரபரணியின் கம்பீரம் கல்மண்டபங்களுக்கிடையே தெளிவாகத் தெரிந்தது.  முத்துநகர் வாசகர் வட்டமும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் இணைந்து   நடத்திய தாமிரபரணிக் கவிஞர்கள் கருத்தரங்கில் கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.  எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா முன் வரிசையில். கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேசியதில் மகிழ்ச்சியே!   புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, இன்னொரு கேலிச் சித்திரம், உறக்கமற்ற மழைத்துளி , நிலா பார்த்தல் ,   கல்யாண்ஜி கவிதைகள் , மணல் உள்ள ஆறு, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள் ,   என் ஓவியம் உங்கள் கண்காட்சி, நொடிநேர அரைவட்டம் ஆகியன கல்யாண்ஜியின் உயிர்த்துடிப்புள்ள கவிதைத்தொகுப்புகள். இப்போது தன