Posts

Showing posts from September, 2016

தன்னம்பிக்கைத் தமிழ் தேசியக் கருத்தரங்கு

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” தேசியக் கருத்தரங்கு தன்னம்பிக்கைத் தமிழ் ஆய்வுக்கோவை வெளியீடு

Image
                       தமிழால் எல்லாம் முடியும்                      பா . தேவேந்திர பூபதி சிறப்புரை       பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் “ தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் ” எனும் தேசியக்கருத்தரங்கு 27.09.2016 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது . கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.       கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த . இ . செ . பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க ஆய்வுக்கோவையான “ தன்னம்பிக்கைத் தமிழ் ” எனும் ஆய்வுநூல்களின் மூன்றுதொகுதிகளை   வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார் . கவிஞரும் வணிகவரித்துறை இணை ஆணையாளருமான பா . தேவேந்திர பூபதி அவர்கள் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்தரங்கச் சிறப்புரையாற்றினார் . தமிழால் எல்லாம் முடியும் அவர் தமது சிறப்புரையில் “ எல்லாம் தமிழால் முடியும் என்ற எண்ணம் தமிழ் பயிலக்கூடிய மாணவர்களிடையே உருவாகியிருக்கிறது. அரசுதவி பெறாப் பாடப்பிரிவிலும் ஆர்வமாக தமிழ்பயிலத்தொடங்கியிருக்கிறார்கள் என்பது தமிழ் வளர்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” தேசியக் கருத்தரங்கு

Image
         தன்னம்பிக்கைத் தமிழ் ஆய்வுக்கோவை வெளியீடு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” எனும் தேசியக்கருத்தரங்கு 27.9.2016 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறஉள்ளது.  கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க ஆய்வுக்கோவையான “தன்னம்பிக்கைத் தமிழ்” எனும் நூலை வெளியிட்டுத் தலைமையுரையாற்ற கவிஞரும்   வணிகவரித்துறை இணைஆணையாளருமான பா.தேவேந்திர பூபதி அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்தரங்கச் சிறப்புரையாற்றுகிறார்.  கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்குகிறார்.   ஆட்சிக்குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழுப்பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக் அப்துல்காதர்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முஹைதீன், அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர்,பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப்ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் உத்தமபா

தி இந்து நூல்வெளியில் நான் எழுதிய " வண்ணதாசன்" நூல் குறித்த விமர்சனம்

Image
சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட "வண்ணதாசன்" எனும் நூல் குறித்த விமர்சனம் தி இந்து நூல்வெளியில் வந்திருக்கிறது.

கவிஞர் அறிவுமதியுடன் சௌந்தர மகாதேவன்

Image

மகிழும் வழி செய்வீரா? : தி இந்து இப்படிக்கு இவர்கள் சௌந்தர மகாதேவன்

பொழுதுபோக்கு ஊடகமான முகநூல் , சமூகத்தைப் பழுதுபார்க்கும் ஊடகமாக மாறிவருவதை அரவிந்தனின் ‘ விவாத மரபு மீண்டு வருமா ?’ கட்டுரை அழகாக உணர்த்தியது.  முகநூல் பக்கங்களில் இப்போது பிரமிள் , சுந்தரராமசாமி , நகுலன் , ந.பிச்சமூர்த்தி , லா.ச.ரா. , புதுமைப்பித்தன் , மௌனி , ஜி.நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் , அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.   அதேநேரத்தில் , சி.சு.செல்லப்பா , க.நா.சு , வெங்கட்சாமிநாதன் , தி.க.சி. போன்றோர் முன்னெடுத்த தரமான , திறமான இலக்கியப் படைப்பை மையமிட்ட விமர்சனப் பார்வை , இன்று குறுகிய வட்டத்தில் செயல்படும் குழு அரசியலாகவும் , தனி மனிதத் துதிபாடல் அல்லது தனிமனித அவதூறாக மாறிப்போகிறது. இணையவாசிகள் தரமான விவாத மரபை நோக்கி நகர்ந்தால் மகிழலாம்.   - சௌந்தர மகாதேவன் , திருநெல்வேலி.

முனைவர் சௌந்தர மகாதேவன் எழுதிய நூல்கள்

Image

உலக சாதனை நூல்வெளியீட்டுவிழாவில் பேராசிரியர்சௌந்தர மகாதேவன் நூல் வெளியீடு

Image

உலகசாதனை நூல் வெளியீட்டுவிழாவில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் எழுதிய நூல் வெளியீடு

Image
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து 2016 செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரேநாளில் 430 நூல்கள் வெளியிடும் உலகசாதனை நிகழ்ச்சியை நடத்தின. அதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய   “இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர்” எனும் நூல் உள்ளிட்ட   425 நூல்களை தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட மலேசியாவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில்    2015 ஆம் ஆண்டு சனவரி 29   பெப்ரவரி 1 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ்மாநாட்டில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய நூல்களை டத்தோ சாமிவேலுவைக் கொண்டுவெளியிட்டுச் சிறப்புச் செய்தது.   கட