Posts

Showing posts from October, 2016

மேலும் இலக்கிய அமைப்பு நடத்தும் இருநாள் தேசியக் கருத்தரங்கம்

டிச.17,18 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடக்கிறது *நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை *வண்ணநிலவன் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம்  திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும் இலக்கிய அமைப்பு உலகஅளவில் கவனம் பெறும் படைப்பிலக்கியங்கள் குறித்தும் தமிழின் சிறப்பான படைப்பிலக்கிய ஆளுமைகள் குறித்தும் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இவ்வாண்டுக்கான கருத்தரங்கினை மேலும் இலக்கிய அமைப்பு டிச.17,18 2016 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடத்த உள்ளது. மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் வரவேற்றுப் பேசுகின்றனர். நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை முதல் நாளில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் நோபல் பரிசுபெற்ற நாவல் “ தனிமையின் நூறு ஆண்டுகள் ”   (One Hundred years of solitude), தமிழவனின்   “ ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ”   நாவல் இரண்டையும் , ‘ மாய யதார்த்தவாத ’ ப் ( Magical Realism) ப

மேலும் இலக்கிய அமைப்பின் பாராட்டு

Image

தீபாவளிக் கவிதை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

Image
இனிப்புத் திருநாள் ......................................... அதிகமாய் ஒருநாள் விடுமுறைகிடைக்காமல் வெகுசிரமத்தோடு வெளியூரில் இருந்து தீபாவளிநாளுக்காய் விடியவிடிய பயணித்துவந்தது மறந்துபோயிற்று. திருநீற்று வாசத்துடன்கூடிய ஆச்சியின் பொக்கைவாய்ப் புன்னகை இஞ்சி மிதக்கும் எண்ணெயைப் பரபரவென்று தலையில் தேய்க்கும் அம்மாவின் அன்புவிரல்கள் முந்தையநாள் விழா அவசரத்தில் வாங்கத்தந்த சேலையோடு நிறைவாய் அடுப்படியில் பலகாரம் தயாரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு இதயமான இல்லாள் புதுத்துணியோடு ஆசீர்வாதம் செய்யும் அப்பா திரியைக் கிள்ளிக் காதுபொத்திக்   கைப்பத்தியில் சீனிவெடிபொருத்திச் தூக்கிஎறியும் தங்கை தலைத்தீபாவளி மகிழ்ச்சியோடு பட்டுச்சேலை சரசரக்கப் பலகாரங்களோடு பக்கத்து வீடுகளுக்குப் பயணிக்கும் பாசத்திற்குரிய பேராச்சியக்கா தீபாவளியன்று மட்டும் கொஞ்சமாய் சிரிக்கும் அண்ணன் பேரின்பவிலாசில் புதுப்படம் பார்க்கச் சைக்கிளோடு காத்திருக்கும் சேக்காளி பாலா வாட்ஸ்அப்பில் வாழ்த்து அனுப்பிவிட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள் தொலைந்துபோன பழையநண்பர்குழாம் இப

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சீதக்காதி தமிழ்ப் பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து நடத்திய தீபாவளிப் பட்டிமண்டபம்

Image
    பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து 25.10.2016 அன்று தீபாவளிச் சிறப்புப் பட்டிமண்டபத்தை நடத்தின.     கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் பட்டிமண்டபத்தைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார்.  அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் , தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அ.மு. அயூப்கான் , அ.சே. சேக் சிந்தா , அனுசுயா , மாலிக் , சாதிக் அலி , குமார் , ஜிதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     பண்டிகைக் கொண்டாட்டங்களால் நமக்கு ஏற்படுவது மனநிறைவா ? பணச் செலவா ? எனும் தலைப்பிலான பட்டிமண்டப நடுவராக சங்கர் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. கணபதி சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேச , மனநிறைவே! எனும் அணியில் தேவி , ராதா , பிரியதர் ~p னி ஆகியோர் பேசினர்.  பணச் செலவே எனும் தலைப்பில் முத்தமிழ் , ஆசிரியர் இளங்கோ , மாணவர் சம்சுதீன் ஆகியோர் பேசினர். விழா முடிவில் நடுவர் மனநிறைவே! என்று தீர்ப்பளித்தார்.       மாணவர் பேரவைத் தலைவர்

ஜெர்மன் நாட்டின் தமிழ்மரபு அறக்கட்டளையும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம்

Image
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும், ஜெர்மன் தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து வரும் 27.12.2016 அன்று தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினைக் கல்லூரி உரையரங்கில் நடத்தஉள்ளன.  கல்லூரித் தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கினைத் தொடங்கிவைத்து “மரபுத்தமிழ்” எனும் ஆய்வுக்கோவையை வெளியிட, அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி “தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தவேண்டிய தேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கலாம் இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஆய்வுமாணவர்கள் கலந்துகொண்டு பின்வரும் பொருளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம்.  தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தும்போது ஆய்வாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தமிழர் மருத்துவம், தமிழரின் அறிவியல் சிந்தனைகள், தமிழர் கட்டடக் கலை, தமிழர் ஓவியமரபு, தமிழர் விளையாட்டு, தமிழர்கல்வி முறை, தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதலில் பயன்படுத்தவேண்டிய நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகள், தமிழ்ப் பண்பாட்டினை இணையதளங்கள் மூலம

உலக அஞ்சல் தினம் ( அக்டோபர் 9) தினமலர் என் பார்வைக் கட்டுரை

Image

அஞ்சல் எனும் அற்புத வரம்

Image
                  முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 சமீபத்தில் நீங்கள் யாருக்காவது உங்கள் கையெழுத்தில் கடிதம் எழுதுனீர்களா? சிக்கனம் கருதி பதினைந்து பைசா அஞ்சலட்டையில் நுணுக்கி நுணுக்கி முத்துமுத்தான எழுத்துகளோடு கடிதங்களை வாசித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன! அஞ்சல்தலைகளையும் பசைகாய்ந்த அஞ்சலகப் பலகைகளையும் பார்க்க அஞ்சலகங்களுக்குப் போய் எத்தனை யுகங்கள் கழிந்துவிட்டன!  குண்டுகுண்டாய் நீள்கோடுகளாய் கிறுக்கலாய் எத்தனைவிதமான கையெழுத்துக்களை வாசித்திருப்போம். அந்த நாளில் எத்தனை மனிதர்களுக்கு சலிக்காமல் நம் சொந்தக்கையால் கடிதம் எழுதியிருப்போம். நம் வரிகளில் வாழ்ந்த வசந்த வரலாறுகள் எங்கே போயின? வீசிக்கொண்டிருக்கும் காற்றுக்கருகே பேசிக்கொண்டிருக்கும் மரங்கள் போல நம் ஆன்மாவோடு ஆனந்தமாய் பேசிக்கொண்டிருப்பன நாம் எழுதிய கடிதங்களும் நமக்கு எழுதப்பட்ட கடிதங்களும் அன்றோ! நம் வீட்டு அஞ்சல் பெட்டி எத்தனைக் கடிதப் பூக்களை நம் கண்களுக்குத் தந்து கவுரவம் தேடியிருக்கும்!  ஏன் மறந்தோம்? மடல் என்றும், கடிதம் என்றும், கட

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை நடத்திய கவிதைப் பயிலரங்கு

Image

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய மாநிலஅளவிலான கவிதைப் பயிலரங்கம்

Image
           மாணவர்கள் கவிதைகள் எழுதவேண்டும்               பிரபல எழுத்தாளர் திலகபாமா பேச்சு     சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை (அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகள்) சார்பில் மாநில அளவிலான கவிதைப் பயிலரங்கம் 04.10.2016 அன்று கல்லூரி உரையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி   தலைமை வகித்துத் தலைமையுரையாற்றினார்.  தமிழ்த்துறைத் தலைவர்   ச.மகாதேவன்   வாழ்த்துரை வழங்கி னார். கல்லூரி ஆட்சிக்குழு   உறுப்பினர்கள் கே.ஏ.மீரான் மைதீன், எம்.கே.எம்.முகமதுநாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசேன், கல்லூரி முதல்வர்     மு. முஹம்மது சாதிக், அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பேராசிரியர் ஏ.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. மு. சாதிக் அலி பயிலரங்கத்திற்கு வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.     சிவகாசி பாரதி இலக்கிய சங்க அமைப்பாளர்   கவிஞர் திலகபாமா   கவிதைப் பயிலரங்கத்தின் முதல் அமர்வைத் தொடங்கிவைத்து “கவிஞர்களும் பாடுபொருளும்” எனும் பொருளில் சிறப்புரையாற்றும்போது