Posts

Showing posts from June, 2013

பேசுகிறோம் .சௌந்தர மகாதேவன்

Image
நடந்த உடன்   நடந்ததைப் பற்றியே பேசுகிறோம் . அடுத்து ஏதாவது நடக்கும்வரை . சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி  

ரயில்

Image
ரயில் தாண்டும் நேரத்தில் ரசனையோடு ரசிக்கிறது ஒன்றும் அறியாமல் ஓடும் நதியும்

குழந்தைகள்

Image
… நாத்தாயத்தும்   யானை முடிக்காப்பும் அரைச் சலங்கையும்   வசம்புக் கயறுமின்றி பௌடருடன்   வளர்கின்றன ஜான்சன்   அண்ட் ஜான்சன் ஆசி பெற்ற அருமைக் குழந்தைகள் சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி  

பேசியே

Image
ஆடறுப்பவன் கூட அநேகமாய் அறுப்பதில்லை யாரையும் பேசியே சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி  

முகநக நட்பு

Image
அன்பளிப்பதற்கான   பொருளின் விலையைக் கிழிக்கச் சொல்லும்   அந்த விநாடியிலே   வீணாகிப் போகிறது நம் முகநக நட்பு சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி