Posts

Showing posts from October, 2015

NAAC PEER TEAM VISIT TO SADAKATHULLAH APPA COLLEGE, TIRUNELVELI

Image
PRESS RELEASE NAAC PEER TEAM VISIT TO SADAKATHULLAH APPA COLLEGE, TIRUNELVELI - 627 011           The NAAC PEER TEAM is visiting Sadakathullah Appa College on 3 rd November, 2015 for Reaccreditation (III Cycle). In the year 2003, the College was accredited by the NAAC with ‘B +’ Grade. Subsequently the College was reaccredited with an ‘A’ Grade in 2009.              During the three – day visit (03-05 November,2015) the PEER TEAM will assess the College on the basis of Seven Criteria such as     i) Curricular Aspects,               ii) Teaching – Learning and Evaluation,  iii) Research, Consultancy and Extension,        iv) Infrastructure and Learning Resources,  v) Student Support and Progression,                   vi) Governance, Leadership and Management, and  vii) Innovations and Best Practices.  The Team Members will visit the Offices of the Principal, the Managing Committee, the Coordinator of the Internal Quality Assurance Cell, the Deans and the

நூற்றாண்டு விழா நாயகர் லா.ச.ரா.

Image
        லா.ச.ரா. என்கிற சௌந்தர்யநடைக் கதையாளர்      முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி( தன்னாட்சி), திருநேல்வேலி   “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்” என்று அழகியலோடு சொன்ன லால்குடி.சப்தரிஷி.ராமாமிர்தம், தமிழ்அழகியல் நடையின் முன்னோடி. வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் வரையறைகளைப் படித்திருக்கிறோம்; லா.ச.ரா. போல் யாரும் எளிமையாய் சொன்னதில்லை , “ சில அழகான மக்களைச் சந்திக்கிறோம் , அதற்குத்தான் வாழ்க்கை ” என்று அவர் சொன்னது திகைப்பாயிருக்கிறது.  சௌந்தர்யத்தை அந்தரநடையில் தந்த அற்புதக் கலைஞர் லா.ச.ரா.வின் தேர்ந்த எழுத்துநடை, கருப்பு மை பூசிய காரிருளில் திடீரென்று பாய்ந்து நம்மைப் பரவசப்படுத்தும் மின்மினிப்பூச்சி போன்றது.   மவுனத்தின் நாவுகளால் தன் படைப்பில் பேசிய மாகலைஞானியும்கூட. வாசகனை உள்ளொளி நோக்கிப் பயணிக்க வைத்தவர். ‘ என் பிரியமுள்ள சினேகிதனுக்கு ’, ‘ பச்சைக் கனவு ’, ‘ வித்தும் வேரும் ’, ‘ யோகம் ’, ‘ பாற்கடல் ’ அவருடைய அற்புதமான படைப்புகள். சிந்தாநிதி அவர் தன்னையே பிழிந்துவைத்த அபூர்வமான படைப்பு. மௌனம் அவருக்குப் பிடித்தமானது. மௌனம் உரு

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக் கல்விக்குழு (நாக்) வருகை

Image
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக் கல்விக்குழு (நாக்) வருகை பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக்குழு (நாக்) நவம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் மறுதரமதிப்பீட்டிற்காக வருகை தர உள்ளது.                 2003 ஆம் ஆண்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி , தேசியத் தர மதிப்பீட்டுக்குழுவின் ‘ பிூ ’ தரமதிப்பீட்டைப் பெற்றது.  அதன் பின்னர் , 2009 ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றில் இக்கல்லூரிக்கு ‘ நாக் ’ குழு 3.11 எனும் மதிப்பெண்ணுடன் ‘ ஏ ’ தர மதிப்பீட்டினை வழங்கியது.                  2015 ஆம் ஆண்டு , வருகின்ற நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் மூன்றாம் சுற்றுக்கான தர மறுமதிப்பீட்டினை நடத்த உள்ளது.                 அந்தக் குழு , கல்லூரியின் பாடத்திட்டம் , கற்பித்தல் கற்றல் மற்றும் மதிப்பிடுதல் , ஆய்வு மற்றும் தகவுரைத்தல் , கல்விசார் விரிவாக்கப்பணிகள் , கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் கற்றலுக்கான வசதிகள் , மாணவர்நலன் மற்றும் முன்னேற்றம் , ஆளுகை , தலைமைப் பண்பு , நிர்வாகம் , கல்விசார் புதுமைகளும் சிறந்த நடைமுறைகளும் எனும

ஆத்மாநாம் என்கிற கவிதை ஆத்மா

Image

‘மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் மகாராஜநகரில் கணினித் தமிழ் வளர்ச்சிக் கலந்துரையாடல் மற்றும் இலக்கியக் கூட்டம்

Image
திருநெல்வேலியில் உள்ள மேலும் இலக்கியஅமைப்பின் சார்பில் கணினித் தமிழ் வளர்ச்சிக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும், தி இந்து இணைப்பிதழ் ஆசிரியர் ஐ.அரவிந்தன் எழுதிய “பயணம்” நாவல் திறனாய்வுக்கூட்டம் மற்றும் 2013 ஆண்டுக்கான தமிழக அரசின் கணினித்தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களுடன் நேர்காணல் ஆகிய நிகழ்வுகள் 24.10.2015 சனிக்கிழமையன்று 10.30 மணிக்கு மகாராஜநகர் வசந்தம் காலனியில் நடைபெற்றது.    மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.   அமைப்பின் தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார்.  எழுத்தாளர் வண்ணதாசன், தமிழக அரசின் கணினித்தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் தனஞ்செயன்,திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பிரதாப்சிங், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,கழுகுமலை தமிழாசிரியர் அசின்தங்கராஜ்,குமாரபா