Posts

Showing posts from March, 2017

அசோகமித்திரன் என்கிற ஞானபீடம்

Image
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ( தன்னாட்சி ) , ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011. அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியதும் மனம் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்தது. நீண்டகதாநதியாய் பெருக்கெடுத்து மனிதசமுத்திரம் நோக்கியோடி மிக ஆழமாய் தன் பார்வையைத் தன் படைப்பிலக்கியங்கள் மூலம் தரும் அசோகமித்திரன் படிப்புலகம் அன்புவயமானது, கிண்டல் தொனி நிறைந்தது. தன்னைப் பற்றிய அதீதமான உயர்மதிப்பீடுகள் ஏதுமின்றி,மிக இயல்பாக 84 வயதிலும் கதையுலகில் இயங்கிவரும் தியாகராஜன் எனும் இயற்பெயரை உடைய அசோகமித்திரன் என்கிற அபூர்வ எழுத்தாளர் மூத்த தலைமுறை எழுத்தாளர் வாழ்வின் துயரங்களை உயரத்திலிருந்து பார்த்தவரல்லர். அன்பின் பரிசு என்கிற வானொலி நாடகம் அவர் எழுதிய முதல் படைப்பாகும். கலைமகளில் வெளியான “ ஒரு நாடகத்தின் முடிவு” எனும் படைப்பு அவரை ஐம்பதுகளில் தமிழ்ச் சிறுகதையாசிரியராக அடையாளம் காட்டியது. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலமை உடையவர் அசோகமித்திரன். உலக இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உண்டு. “அப்பாவின

தேனி, தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பேராசிரியருக்கு நன்னெறி ஆசிரியர் விருது

Image
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் பிரபஞ்சன் வழங்கினார் தேனியில் உள்ள தேனீ கலை இலக்கிய மையம் சார்பில் பெரியகுளத்தில் 18.3.2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற சாதனையாளர்களுக்குச் சாதனை விருதுகள் வழங்கும் விழாவில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனுக்கு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் பிரபஞ்சன் “நன்னெறி ஆசிரியர்” விருதினை வழங்கிப் பாராட்டினார்.  இவ்விழாவில் எழுத்தாளர் தேனிசீருடையான் முன்னிலை வகித்தார்.  நன்னெறி ஆசிரியர் விருது பெற்ற பேராசிரியர் ச.மகாதேவன் 19 ஆண்டுகளாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். கல்லூரியில் பயிலும்போதே பாரதப் பிரதமரின் தேசியவிருது, தமிழக முதல்வரின் உலகத்தமிழ்மாநாட்டு விருது பெற்றவர். சென்னையில் உள்ள கவிதைஉறவு அமைப்பின் தமிழ்மாமணி விருது, சென்னை கதீட்ரல் அரிமா சங்கத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, பாலம் அமைப்பின் இளம்சமூகசேவகர் விருது  உட்படப் பல விருதுகள் பெற்றவர். அவர் எழுதி மலேசியாவில் உள்ள மலயாப் பல்கலைக்கழகமு

TIRUNELVELI RAHMATH NAGAR SADAKATHULLAH APPA COLLEGE NEWS

Image

சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லையில் ஞாயிறு அன்று பாராட்டுவிழா

Image
“ஒரு சிறுஇசை” எனும் சிறுகதைத்தொகுப்புகாக 2016 ஆம் ஆண்டுக்கான  சாகித்ய அகாடெமி விருதினைப் பெற்ற திருநெல்வேலி எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வரும் ஞாயிறு ( 19.3.2017) அன்று மாலை 5.30 மணிக்கு திருநெல்வேலி ஆர்டிஓ அலுவலகம் அருகேயுள்ள பாலாஜி டவர்ஸ் ஸ்ரீவாரி அரங்கில் பாராட்டுவிழா நடைபெறுகிறது. கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடல்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் கவிஞர் அ.இலட்சுமிகாந்தன் விழாவுத் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியருமான சு.வெங்கடேசன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் தோப்பில் முகம்மதுமீரான், பேராசிரியர் “மேலும்” சிவசு, கவிஞர் கிருஷி, பேராசிரியர் ச.மகாதேவன், எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் மா.முருகன்

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் (NEET) தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

Image
                நாடெங்குமுள்ள மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 52,715 மருத்துவப் படிப்புக்கான இடங்களில் , 15 சதவீத இடங்களை மத்திய அரசின் ஒதுக்கீட்டிற்குத் தந்துவிட்டு ஏனைய 85 சதவீத இடங்களைக் கலந்தாய்வு நடத்தி அந்தந்த மாநில அரசுகளே நிரப்பி வந்த நிலையில் , இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் பயில இந்தியா முழுமைக்குமான ஒரே தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.                 மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை வரும் மே மாதம் 7 ஆம் தேதி ஞாயிறு அன்று இந்தியா முழுக்க நடத்தவுள்ளது. அதன் முடிவுகள் ஜூன் 8, 2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் உள்ளிடப்பட்டு 31.01.2017 முதல் 01.03.2017 வரை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இறுதி நாளிலிருந்து ஒரு வார காலம் அவகாசம் தரப்பட்டது.                 ‘ நீட் ’ எனும் அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வினைத் தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் , வங்காளம் , மராத்தி , குஜராத்தி , ஹிந்தி

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு

Image
ஒட்டுமொத்த பொருளாதாரம் முன்னேற்றம் அடையவேண்டுமானால் இஸ்லாமிய வங்கியியல் இந்தியாவில் வரவேண்டும்   - இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர்   முனைவர் ஜெ. சதக்கத்துல்லா பேச்சு பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு 11.03.2017 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ். த.இ.செ. பத்ஹுர் ரப்பானி சொற்பொழிவைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றினார்.   ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் மைதீன் , அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் , எல்.கே.எம்.ஏ. முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லா , சிறப்பு விருந்தினராய் பங்கேற்று ‘ இஸ்லாமிய நிதி ’ எனும் தலை

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கு

Image
நம்முடைய வாழ்வின் நேரான எண்ணங்களே வெற்றிகளாக மாறுகின்றன – திருநெல்வேலி சார்பு நீதிபதி ஜெ. தமிழரசி பேச்சு பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து 08.03.2017 காலை 10.30 மணிக்கு மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கை உரையரங்கில் நடத்தியது. கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் கருத்தரங்க தலைமையுரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் உசேன் , அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் , மாணவர் பேரவையின் தேர்தல் ஆணையர் பேராசிரியர் பி.ஏ.அப்துல்கரீம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அலுவலகத்தின் கோமதிநாயகம் , தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான் , விலங்கியல் துறைத் தலைவர் சித்தி ஜமீலா , கணிதவியல் துறைத் தலைவர் ரஷீதா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சார்பு நீதிபதி மற்றும் திருநெல்வேலி மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெ. தமிழரசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு