Posts

Showing posts from July, 2015

வானத்தை வசப்படுத்திய அக்கினிச் சிறகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்கு எழுத்தால் அஞ்சலி

Image
வானத்தை வசப்படுத்திய அக்கினிச் சிறகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ................................................................................................................................................................. முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி), திருநெல்வேலி,9952140275 mahabarathi1974@gmail.com   சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது.சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம்அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம் நமக்குள்ளும் வருகிறது.  காலம், காகிதத்தைக் கிழிப்பதாய் நினைத்து ஒரு கவிதையைக் கிழித்துவிட்டது.தன் இறுதிவினாடி வரை பேச்சும் மூச்சும் அன்னை பாரத்திற்கே என்று வாழ்ந்துகாட்டிவிட்டு விடைபெற்றது  விஞ்ஞானம்.விண்வெளித்துறை ஆய்வறிஞராய்,அணுசக்தித்துறை விஞ்ஞானியாய்,ஒப்பிலா தேசபக்தராய்,இந்தியப் பண்பாட்டின் அரும

தாம்ரபர்ணீ மஹாத்மியம் எனும் அபூர்வமான நூல் திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கன்று வெளியிடப்படுகிறது

Image
தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி பெருக்கெடுத்தோடும் புனிதப்பதியில் 274 சிவாலயங்கள் உள்ளன.திரும்பிய திசையெலாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள அற்புதமான ஆன்மா லயிக்கும் அழகு ஆலயங்கள்.  திருநெல்வேலியைச் சார்ந்த பத்திரிகையாளர் திரு.அ.சங்கர்ராம் (செல்: 9443452594) வில்லிபுத்தூரான்,கோதையூரான் என்ற புனைபெயரில் தொடர்ந்து அரிய படைப்புகளைத் தருகிறார். அவர் பலஆண்டுகள் உழைத்துத் தொகுத்த அருமையான நானூறுபக்க நூல் மகாகவி பாரதியார் பயின்ற திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 3.8.2015 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.  திருநெல்வேலியின் மிகப்பழமையான   ஆறுமுகம் பிள்ளை புத்தக நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்துள்ளது.  முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி. தொடர்புக்கு: திரு.அ.சங்கர்ராம் (செல்: 9443452594)

திருநெல்வேலியில் சித்திரமும் கைப்பழக்கம் அமைப்பு புதுமைப்பித்தன் கருத்தரங்கு

Image

தினமலர் என்பார்வை: நலம் நலமறிய ஆவல்: முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
                   நலம் நலமறிய ஆவல்.. .................................................................................................................................................... முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் சொந்தக் கையெழுத்தில் எதையாவது நீங்கள் எழுதி எத்தனைநாட்களாயிற்று!  எழுத்து எத்தனை சுகமான அனுபவம்.வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது.”நலம் நலமறிய அவா” என்று தொடங்கி மற்றவை நேரில் என்று முடித்து அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி யுகமாகிவிட்டது.கிர்ரென்ற சப்தத்தோடு பித்தளைப் பாத்திரத்தில் அழகான கையெழுத்தில் நம் பெயரை எழுதித்தருகிற மனிதர்கள் குறைந்து போய்விட்டார்கள்.  எழுத்தைத் தொலைத்த எந்திரவாழ்க்கை இனிமையை இழத்தல் எத்தனை கொடூரமானது! வானத்தில் பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பார்ப்போரைக் கழுத்துவலிக்கத் திரும்பிப் பார்க்கவைப்பதுபோல் பலரை