Posts

Showing posts from July, 2017

பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களின் அருமுயற்சி..EVALUATION FRAME WORK -SEMINAR ON DEVELOPING NEW CURRICULAM

Image
பள்ளிக்கல்வித்துறை நடத்திய புதிய பாடத்திட்டக் கருத்தரங்கம் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயசந்திரன் இ.ஆ.ப.வந்த பின் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பத்தாம்வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட முறைமை நிறுத்தப்பட்டது.  பதினொன்றாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு அரசுப் பொதுத் தேர்வாய் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு மதிப்பெண் 200 லிருந்து 100 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களின் பொதுஅறிவுத் திறனை மேம்படுத்தவும் மொழித்திறனை வளப்படுத்தி வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் தமிழகமெங்குமுள்ள 31322 அரசுப் பள்ளிகளுக்கு ரூ 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் வாங்கப்பட உள்ளன. பள்ளிமாணவர்கள் போட்டித்தேர்வுகளில் பங்குபெறப் பயிற்சிதரும் நோக்கில் அனைத்து ஒன்றியங்களிலும் போட்டித் தேர்வுப்பயிற்சி மையங்களை அரசு ஏற்படுத்த உள்ளது. பாடத்திட்ட மாற்றம்  தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும் நோக்கில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்த

பேனா என்கிற இனிய நண்பன்: சௌந்தர மகாதேவன்

Image
                   பேனாயணம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1813601 தலை குனிந்தாலும் தன்னால் எழுத்தைத் தந்து தன்னைக் கரம்பிடித்தவரைத் தலைநிமிரவைக்கமுடியும் என்று காட்டிய பேனாக்களின் மீது எனக்குக் காதல் வரக் கற்றுத்தந்தவர் என் அப்பாதான்.  நீர்மையின் நீட்சியாய் நீலநிற,கருநிற,செந்நிற எழுத்துகளைத் தந்த, அந்த மையூற்றுப் பேனாக்களை உயர்திணையில் வைத்துப் பார்த்தவர் என் அப்பா.  கனமான கருப்புப் பிரேம் போட்ட கண்ணாடியை மாட்டிகொண்டு, அப்பா நீலநிறப் பேனாவால் பக்கம் பக்கமாய் எழுதுவதைக் கண்டால், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரைப் பார்த்தது போல் இருக்கும்.  அப்போது எங்கள் வீட்டில் மேசை நாற்காலியெல்லாம் கிடையாது. குட்டையான மோடாவில் அமர்ந்து கொண்டு நீளமான கட்டிலில் பரீட்சை அட்டைக் கிளிப்பில் நீள் காகிதத்தைச் செருகி அவர் தன்னை மறந்து பேனாவால் எழுதத் தொடங்குவதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பேனா அவருக்கு உயிர்.ஒரு கைக் குழந்தையைப்போல் அதை அவர் பராமரிப்பார். காலையில் அகில இந்திய வானொலியின் மாநிலச் செய்திகள் கேட்டுக்கொண்டே அந்த நீலநிறப்பேனாவை, பழைய பத்திக

சௌந்தர மகாதேவனின் தண்ணீர் ஊசிகள் கவிதைத்தொகுதி

Image

சௌந்தர மகாதேவன் கவிதைத்தொகுப்பு : தண்ணீர் ஊசிகள்

Image
                          சொல்லூசல் கவிதை , கணநேர மொழியனுபவம். வாழ்க்கை அனுபவங்களின் நுண்பதிவு கடந்துசெல்ல முடியா மனிதர்களை இந்த வாழ்க்கை எனக்குத் தந்திருப்பது நான் பெற்ற பேறு. அவர்களை என் விருப்பக் கவிதைகளால்  நகலெடுத்துக்கொண்டிருக்கிறேன்.  முக்குத் திரும்ப முனகும் தேர் வாகையடி முக்கில் நின்று ரதவீதியை வெறித்துப் பார்ப்பதைப் போல் என் சாரிப் பாட்டியை, சைக்கிளில் வைத்து உலகைக் காட்டிய என் தந்தையை, என் அன்புப் பிள்ளைகளை, என் பாண்டிய வேளாளர் தெரு கிழக்கு உச்சினிமாகாளியை நான் பார்த்து அக்கணத்தில் மனம் எழுதிய கவிதைகள்தான் “மண்ணைத் தைக்கும் தண்ணீர் ஊசிகள்”. இந்தப் பிள்ளையின் கவிப்பிரசவம் சிவசு அய்யா என்கிற படிப்புவாசியின் கையால் நடந்திருக்கிறது. வாசிப்பின் மீதும் இலக்கியத்தின் மீதும் நேசம்கொள்ள வைத்த மேலும் சிவசு அவர்களின் மேலும் வெளியீட்டகம் வெளியிட்டிருக்கிறது. மிகநுட்பமான நடையில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற அன்புக்குரிய எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்கள், தெருக்களில் தையல் இயந்திரத்தோடு அலையும் தையல்காரனாய் என்னை உருவகப்படுத்தியிருக்கிறார். அவர் வாழ்த்துரை, நான் பெற்ற இன்ன