Posts

Showing posts from June, 2016

திருநெல்வேலியில் “மேலும் இலக்கிய அமைப்பு” நடத்தும் புதுமைப்பித்தன் நினைவுநாள் கருத்தரங்கு

Image
தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் நினைவு நாளன்று அவர் படைப்பிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கை “மேலும்” இலக்கிய அமைப்பு தொடர்ந்து   பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இவ்வாண்டு புதுமைப்பித்தன் நினைவுநாளன்று திருநெல்வேலியில் நடைபெறஉள்ள இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.    இக்கருத்தரங்கு குறித்து மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில் உள்ளதாவது.. தமிழ்ச் சிறுகதையின் தடத்தை மாற்றிய புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்து பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து திருநெல்வேலி மதுரை திரவியம் இந்துக் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றவர்.    திருநெல்வேலியையும் சென்னையையும் களமாகக் கொண்ட புகழ்பெற்ற சிறுகதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, இதழாசிரியராக உலக இலக்கியங்களை உள்வாங்கிப் பல சோதனைமுயற்சிகளைத் தமிழ்ப்படைப்புலகில் செய்த புதுமைப்பித்தன் ஜூன் 30,

Dr.S.Mahadevan, Head of the Department Tamil,Sadakathullh Appa College attended 9th INTERNATIONAL CONFERENCE - SEMINAR ON TAMIL STUDIES held at the UNIVERSITY OF MALAYA, KUAlA LUMPUR ,Malaysia

Image
9 th  INTERNATIONAL CONFERENCE - SEMINAR ON TAMIL STUDIES ,UNIVERSITY OF MALAYA, KUAlA LUMPUR Dr.S.Mahadevan, Head of  the Department Tamil  attended 9th  INTERNATIONAL CONFERENCE - SEMINAR ON TAMIL STUDIES  held at the UNIVERSITY OF MALAYA, KUAlA LUMPUR ,Malaysia  From  29.01.2015 to 1.02.2015 and presented a paper titled Tirukuralil Maruthuva Sinthanaikal.The two books authored by him entitled  poikai alwar and boothaalwar were released at the conference.

அறிவை விரிவு செய்யும் புத்தகத் திருவிழா : தி இந்து இப்படிக்கு இவர்கள்

Image
  வெள்ள சேதத்திலிருந்து மீண்டு எழுந்திருக்கும் சென்னை , புத்தகத் திருவிழாவால் மேலும் புத்துணர்ச்சி பெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் 39- வது புத்தகத் திருவிழாவை நடத்திக்கொண்டிருக்கிறது. அரங்குகளின் வரிசை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்சிகளைத் தொலைக்காட்சி மூலமும் இணையதளங்கள் மூலமும் நேரடியாக ஒளிபரப்பு செய்தால் , வெளியூர் இலக்கிய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும். சென்று பார்த்துவிட்டு வரும் நிகழ்வாக அமையாமல் , எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கும் இனிய அனுபவமாகவும் அமையக்கூடும். பள்ளி , கல்லூரி மாணவர்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் அதிகமாய்ப் பங்கேற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். தமிழகத்தின் அனைத்துக் கல்லூரி நூலகங்களும் அதிகமான நூல்களை வாங்கிப் பதிப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சமைப்பதற்கு , துயில்வதற்கு , உண்பதற்கு என வீட்டில் தனித்தனியாக அறை இருப்பதைப் போல் நூல்களைப் பயில்வதற்கும் ஓர் அழகான அறை ஒதுக்கப்பட வேண்டும். வீடே நூலகமானால் அறிவை விரிவுசெய்து அகண்ட பார்வையால் அனைவரையும் ஒன்றாகக் கருதும் ஒப்பிலா உயர் ச

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கற்றதும் பெற்றதும்

Image
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்த உயர்ந்த மனிதர் ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களையும் ஆயக்குடியில் கேன்சர் நோயாளிகளுக்கான சேவைமையத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் திருமதி. இராமகிருஷ்ணன் அவர்களையும் அமர்சேவா சங்கத்தின் செயலாளர் திரு. சங்கரராமன் அவர்களையும் சந்தித்தேன்.    வாழ்வின் பயனை அவர்கள் சேவையால் அடைந்துகொண்டிருக்கும் பெருமகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் கண்டேன். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள், திரு.இராமகிருஷ்ணன் நம்பிக்கையின் வாழ்ந்துகாட்டி. சமூக சேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் இராமகிருஷ்ணன் குறித்து எனக்குச் சொன்னவர்.    1997 இல் எம்.ஏ மாணவனாய் பயின்றபோது பாலம் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழக்கை வரலாற்றினை எழுதினேன். அவர் விதைத்த விதைதான் சேவைநிறுவனங்களை நோக்கி வாழ்வைத் திருப்பியது.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி, அங்கே இராமகிருஷ்ணன் என்கிற ஒப்பற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலர

மாற்றுத்திறனாளிகள் தினக்கட்டுரை: தினமலர் என் பார்வை

Image

இப்படியும் ஒரு மாமனிதர்ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன்

Image
தன்னிடம் இருப்பதைத் தருவதன்று தானம்,தன்னையே தருவதுதான் தானம்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்த உயர்ந்த மனிதர் ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள்.வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள்,அவர் நம்பிக்கையின் வாழ்ந்துகாட்டி. சமூக சேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் இராமகிருஷ்ணன் குறித்து எனக்குச் சொன்னவர்.1997 இல் எம்.ஏ மாணவனாய் பயின்றபோது பாலம் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழக்கை வரலாற்றினை எழுதினேன்.அவர் விதைத்த விதைதான் சேவைநிறுவனங்களை நோக்கி வாழ்வைத் திருப்பியது.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி, அங்கே இராமகிருஷ்ணன் என்கிற ஒப்பற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலராக இருந்துகொண்டிருக்கிறார்.நான்காமாண்டு பொறியியல் பட்டப்படிப்புப் பயிலும்போது அவர் கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறுஏறும்போது கைதவறி கீழேவிழுந்தார்.தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலையில் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ