Posts

Showing posts from December, 2013

நதியற்றவனும் நாதியற்றவனும்

Image
இழுக்கைச் சுமந்து பிறர் அழுக்கைச் சுமந்து ஆம்பல் சுமந்து சவச்சாம்பல் சுமந்து நிலமெல்லாம் நடந்து வயல்வழி தண்மையாகும் நதியற்றுப் போனவன்தான் உண்மையில் நாதியற்றுப் போனவன். சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

பொய்பற்றி எரியும் கவிதைகள்

மலர்களைத் தின்பவனிடம் வனரணம் பற்றி வரையச் சொன்னது என் தவறுதான். நதிக்குள் நீர்க்கழிப்பவனிடம் கங்கைச் செம்புதந்தது என் தவறுதான். நூலகம் எரிப்பவனிடம் அணிந்துரைக்கு அலைந்தது என் தவறுதான். நெய்பற்றி எரியும் நெருப்பு மாதிரி பொய்பற்றி எரிகின்றன உன் புரட்டுக் கவிதைகளும்.
நகரும் சவம் .............................. நகர்த்திப்போகின்றன நாட்களை வினாடிகள் நகர்த்திப்போகின்றன ஆண்டுகளை நாட்கள் நகர்த்திப்போகின்றன ஆண்டுகளை யுகங்கள் நகர்த்திப்போகின்றன யுகங்கள் ஆட்களை நகர்த்திப்போகின்றன ஆட்களைச் சவங்களாய்

திருநெல்வேலி,சௌந்தர மகாதேவன் கவிதைகள்

Image
விரல்வலி ............................ எழுதிச்செல்கின்றன விரல்கள் ஏதேதோ நெருப்பு குறித்து எழுதும்போது சுட்டுவிரலில் சுடர்விடுகிறது   நெருப்பு சிகப்பாய் மயானம் குறித்து எழுதும்போது மண்துகள் நெருடுகிறது பெருவிரல் நகக்கண்ணிலும் வனம் குறித்து எழுதும்போது மொட்டுகள் முகிழ்கின்றன சுட்டுவிரல் நுனியிலும் வன்புணர்வு குறித்துஎழுதும்போது கத்தியாகிக் கிழிக்கின்றன விரல்பத்தும். காரையார் குறித்து எழுதும்போது அருவி வழிகிறது அனைத்து விரல்களிலும் உரல்களை நகர்த்தும் விரல்களால் நோண்டுகிறோம் விரல்வலியறியாமல் காலமரம் .................... நினைவற்ற நெடுங்காட்டில் நீண்டுயர்ந்து வளர்கின்றன புனைவற்ற என் காலமரங்கள். நகரும் சவம் .............................. நகர்த்திப்போகின்றன நாட்களை வினாடிகள் நகர்த்திப்போகின்றன ஆண்டுகளை நாட்கள் நகர்த்திப்போகின்றன ஆண்டுகளை யுகங்கள் நகர்த்திப்போகின்றன யுகங்கள் ஆட்களை நகர்த்திப்போகின்றன ஆட்களைச் சவங்களாய் சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி