Posts

Showing posts from 2016

சாகித்ய அகாதெமி விருது பெறும் வண்ணதாசன் படைப்புலகம் குறித்து

Image

vannadasan bags Sahitya Akademi for Oru Siru Isai -The New INDIAN EXPRESS 22.12.2016

Image

ஜெர்மன் நாட்டின் தமிழ்மரபு அறக்கட்டளையும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம்

Image
ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை      ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பக் கடைசிநாள் 10.12.2016 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும், ஜெர்மன் தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து வரும் 27.12.2016 அன்று தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினைக் கல்லூரி உரையரங்கில் நடத்தஉள்ளன. ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்க, கல்லூரித் தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கினைத் தொடங்கிவைத்து “மரபுத்தமிழ்” எனும் ஆய்வுக்கோவையை வெளியிட, அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி “தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தவேண்டிய தேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 2001 இல் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்மரபு அறக்கட்டளை மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி,இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் கிள

சிந்தையில் புவனத்தைச் சிருஷ்டித்த சிந்தாநதி லா.ச.ரா பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

Image
   அக்டோபர் – 2016 லா.ச.ரா. நூற்றாண்டுவிழாக் கட்டுரை     சிந்தையில் புவனத்தைச் சிருஷ்டித்த சிந்தாநதி லா.ச.ரா      ................................................................................................................................ பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி பெண்களின் வாழ்வை இனிய வார்த்தைகளால் கொண்டாடிய  கதைக் கவிஞன் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். ராமேஸ்வரம் போய் அவர் தாய் தவமிருந்து பெற்ற பிள்ளை. பதினாறு வயதிலிருந்து எழுதத் தொடங்கியவர், இருநூறு சிறுகதைகள்,  ஆறுநாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு உரைநடைநூல்கள் என்று தரமாக எழுதிய தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர். தாய்மையைக் கொண்டாடிய கலைஞன், தாய்தான் அவருக்குக் குரு, குடும்ப வாழ்வை எப்படி எழுத்தில் கொண்டாடுவது என்று அழகியலோடு கற்றுத்தந்தவர்.  அவர் பிறந்து நூறாண்டாகிறது தமிழ்ச்சிறுகதைகள் பிறந்தும் நூறாண்டாகிறது. தான் வாழ்ந்த வாழ்வை தன்மொழியில் தான் சொல்லா விட்டால் வேறுயார் சொல்வார்? என நினைப்பவர் லா.ச.ரா. வாழ்க்கை குறித்த தெளிவு அவரது படைப்பிலக்கியங்களில் மிகுந்திருந்தது. “

டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ..மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம்

Image
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2016/12/02/ArticleHtmls/02122016010003.shtml?Mode=1     மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி 9952140275 இறைவன் தந்த இனிய வரம் இந்த அழகிய வாழ்க்கை. சில நேரங்களில், சில காரணங்களால் சிலர் மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிடுகின்றனர், அல்லது சில விபத்துகள் அப்படி ஆக்கிவிடுகின்றன.  பூச்சியாய் பிறந்தாலும் தளராது பறக்கிறது தட்டானெனும் தன்னிகரற்ற பறவை. தட்டானே எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி சுதந்தர வானில் சுற்றித் திரியும்போது நாமேன் கவலைப்படவேண்டும்? உலகமே போற்றிப்புகழும் ஆற்றல் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஏன் ஏன் வருந்தவேண்டும்?   நொந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாய் மாற்றும் மூன்றாம் கையான நம்பிக்கையை மறந்துவிட்டு அவர்கள் ஏன் வருத்தத்தின் வாசலை தன் நிறுத்தத்தின் வாசலாய் எண்ணிக்கொண்டு துயர்படவேண்டும்? புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய் ஏன் மாறவேண்டும்? மறுப்ப