Posts

Showing posts from April, 2016

SADAKATHULLAH APPA COLLEGE NEWS

Image

ராஜ் தொலைக்காட்சியின் திருநெல்வேலி அகடவிகடத்தில் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image

உலக புத்தகதினத்தை முன்னிட்டு பாளை. அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல் குறித்த பயிலரங்கு

Image
உலக புத்தகதினத்தை முன்னிட்டு பாளை. அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல் குறித்த பயியரங்கு   23.4.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. தென்னகப் பழங்கால மருத்துவச் சுவடிகள் ஆய்வுமைய இயக்குநரும் திருநெல்வேலி அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவிப்பேராசிரியர் டாக்டர் சுபாஷ்சந்திரன் பயிலரங்கின் நோக்கம் குறித்து நோக்குரையாற்றினார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் விருந்தினராய் கலந்து கொண்டு உலகப் புத்தகதின உரையாற்றினார். தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் பாதுகாத்தல் மற்றும் மின்னனு முறையில் ஆவணப்படுத்துதல் குறித்த பயிலரங்கில் கலந்துகொண்டு பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவன மருத்துவ மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா தலைமையுரை ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில்   “ திருநெல்வேலி பகுதியில் அரிய மருத்துவச் சுவடிகள் பாரம்பரிய மருத்துவர்களிடம் உள்ளன. யோகா,மருந்துதயாரித்தல், நாடி குறித்த பொக்கிஷங்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய மருத்துவர்களிடம் அவர்கள் குடும்

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தி இந்து நடத்திய வாக்காளர் வாய்ஸ் நிகழ்ச்சி

Image
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி   தி இந்து தேர்தல்ஆணையத்தோடும் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியோடும் இணைந்து நடத்திய ‘வாக்காளர் வாய்ஸ்’ புதியதலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. பதினெட்டு வயதான இளம்வாக்காளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியின் இனிய பதில் இந்து ஒருங்கிணைத்த “வாக்காளர் வாய்ஸ்” நிகழ்ச்சி.  நம் கல்லூரியில் இந்து நடுப்பக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்கள் முன்நிறுத்திப்பேசிய கர்மவீரர் காமராஜரும், மகாத்மா காந்தியும், ஜீவாவும் மாணவர்களுக்குப் புதியவர்கள் இல்லை என்றாலும் அவர்களின் உயரிய செயல்களால் அவர்கள் உயர்ந்து நின்றார்கள். தொய்வில்லாமல் மாணவர்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிச்சம் பாய்ச்சிய அவர் உரை வழக்கமான மேடைப்பேச்சு பாணியில் அமையாது வெகுஇயல்பாய் இருந்தது.  அறிவித்தல், அறிவுறுத்துதல், தீவிரமாய் சிந்திக்கவைத்தல், அலசுதல், தீர்வுசொல்லல் என்ற பாணியில் அமைந்த அவர் உரை இறுதியில் இனி என்ன செய்வது? என்ற முடிவெடுத்தலில் வந்துநின்றபோது மாணவர்கள் உற்சாகமானார்கள். நாளிதழ் படிக்காதவர்கள் சனநாயகம் குறித்துப் பேசத் தகுதியற்றவர்கள் என்று கூறியபோத

திருநெல்வேலி தினகரன் நடத்திய கல்விக்கண்காட்சியில் முனைவர் சௌந்தர மகாதேவன்

Image

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Image
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 2.4.2016 அன்று நடைபெற்ற பட்டமளிப்புவிழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் 607 மாணவமாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.    விழாவில் கல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக் வரவேற்றுப் பேசினார்.கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி தலைமையுரை ஆற்றினார். கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன், கல்லூரித் தேர்வாணையர் பேரா.சுப்ரமணியன், அரசுதவிபெறா வகுப்புகளின் இயக்குநர் பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்புவிருத்தினராய் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் 607 மாணவமாணவியருக்கு பட்டங்களை வழங்கிப்பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார். அவர் தமது உரையில் “ சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழும் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தேர்தல்கள் சனநாயக முறைப்ப