Posts

Showing posts from February, 2013

காலண்டர் கடிதம்

Image
காலத்தைக் கிழித்துப் போடும் காலண்டர்கள் எங்களுக்குப் பேதங்கள் பெரிதில்லை . பெரியார் படத்தையும் பெரிய பாளையத்தம்மன் படத்தையும் நாங்கள் எளிதாக எங்கள் மேல் ஏற்றுக் கொள்கிறோம் . இன்னும் சொல்லப் போனால் ஈரோட்டுப் பெரியாருக்குக் கீழே நல்லநேரத்தை எங்கள் தாள்களின் மீதேற்றித் தைரியமாகத் தர முடிகிறது . சுதந்திர தினங்களைக் காலத்தாள்களால் கட்டமிட்டு ச் சொல்லும் எ ங்க ளை ஆண்டுதோறும் ஆ ணி கள் அறைந்து அட்டையோடு அடிமைப்படுத்தி விடுகிறார்கள் எங்களில் சில கம்பிகளால் கட்டப்பட்டு காயப்படுத்தப்படுகிறோம் எங்களின் மறுபக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி தருவது ! விதவிதமான விடுமுறை நாட்களை ’ அப் ’ புறம்தானே காட்டியுள்ளோம் இப்போது எங்களுக்குள் இருக்கும் ஒரே கேள்வி இலவசமாய் கிடைத்ததென்று அறைக் கு இ ரண்டு மாட்டியுள்ளீர்களே ! பலவற்றில் தேதிகள் கிழிக்கப்பட வே இ ல்லை . கிழிபடப்போவது உங்களின் மிச்சக் காலங்களா ? - சவுந்தர மகா

’எலி’மையோடு வாழ்

Image
எலிகளின் சுரண்டல்கள் சுதந்திரமானவை ! இப்போதெல்லாம் தேங்காய்சில்லுகளைத் தேடி எங்களூர் எலிகள் போவதேயில்லை தப்பித் தவறி ப் பொறிக்குள் புகுந்துவிட்டாலும் அதன் முன் கம்பிகளைக் கடித்துக்குதறி வெளியேறிவிடும் சமார்த்தியமும் அவற்றுக்கு உண்டு . இருட்டு வந்தால் இன்பமாய் அலைவதும் வெளிச்சம் வந்தால் குளிர் பதனப் பெட்டிக்குப் பின் புகுந்து கொள்ளவும் அவற்றால் முடிகிறது அதன் அட்டகாசம் அதிகம் … அபிதான சிந்தாமணியைக் க டித்து க் குதறியிருக்கிறது காகிதக் குப்பையாக .. பொறியில் மாட்டிய எலியை இரும்பு வாளித் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற மகத்தான மான்மியம் அப்பாவினுடையது . வாய்கட்டிய கோணிக்குள் பொறியின் மரக்கதவைத் திறந்துவிட்டு விறகுக் கட்டையால் எலியை அடித்துக் கொல்வார் பட்டுக்கோட்டை மாமா சுரண்டித் தின்னும் எலிகளுக்கு மத்தியில் இற்றுப்போன மரச்சட்டங்களால் ஆன புராதனகாலத்து எலிப்பொறி மட்டும் என்ன செய்துவிட முடியும் ?

காகங்களும் பாவங்களும்…

Image
இப்போதெல்லாம் மொட்டை மாடியில் காகங்களைக் கண்டால் பாவமாக இருக்கிறது . அப்போதெல்லாம் அம்மா அடுக்களையில் சமையல் முடித்ததை அவளது காக அழைப் பு ஊருக்கு உணர்த்தும். போன புதன்கிழமை நயினா தாத்தாவின் தெவசம் முடித்து வாத்தியார் தந்த பிண்ட உருண்டையைத் தொன்னையில் வைத்து மொட்டை மாடியில் காகத்தைச் சப்தமாய் கூப்பிட்டேன் . சாதத்தைச் சாப்பிட ப் பத்துப் பதினைந்து காகங்கள் பாய்ந்து உடனே உண்ண வந்தது நல்ல சகுனமென்று சொன்ன வாத்தியார் ஒரு வருடமாய் தாத்தாவுக்குத் தாங்காத பசியென் றார் கடும்பசி தாத்தாவுக்கு மட்டும்தானா ? கடும் பசி காகத்திற்கும் தானே ! அது சரி அரைக் கரண்டி ச் சோற்றில்தான் மிச்சப்படுத்தப் போகிறோமா நம் வீட்டுக் கடன்களை ? - சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி .