Posts

Showing posts from August, 2017

திருநெல்வேலி மேலும் அறக்கட்டளையின் திறனாய்வாளர் விருது

Image
உலகஅளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கியத் திறனாய்வாளருக்கு திருநெல்வேலி “மேலும்” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன் ( 70) எண்பதுகளில் “ மேலும் ” என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர். படைப்புலகக் கருத்தரங்குகள் வல்லிக்கண்ணன் , வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். “ மேலும் ” வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் , கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறையோடும் கவிஞர்

தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுப்பு: தினமலர் நூல் விமர்சனம்

Image

சௌந்தர மகாதேவன் தண்ணீர் ஊசிகள் கவிதைத்தொகுப்புக்கு தினமலர் தி இந்து (தமிழ்) வழங்கியுள்ள விமர்சனங்கள்

Image

தினமலர் படிக்கலாம் வாங்க பகுதியில் சௌந்தர மகாதேவனின் தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுதி குறித்த விமர்சனம்

Image
நன்றி திரு.ஜி.வி.ரமேஷ்குமார் அவர்களே ........................................................................... நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை ஆனால் நான்காண்டுகளாக எழுத்தின் மூலம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.மிகக் கூர்மையான மொழிநடை இவருடையது. அவர் எழுதக் கேட்டுக்கொண்டபின் தினமலரில் இதுவரை இந்த நான்காண்டுகளில் நாற்பது கட்டுரைகள் எழுதியிருகிறேன். மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல்,விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் இணையதளத்தின் மூலம் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களிடம் என் எழுத்துகளைக் கொண்டு செல்பவர். தரமான நூல்களைத் தந்துள்ள நல்ல படைப்பாளர். திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதில் வல்லவர். தினமலர் “படிக்கலாம் வாங்க” பகுதியில் இன்று என் தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுப்பு குறித்து அழகாக தினமலர் ஆசிரியர் திரு.ஜி.வி.ரமேஷ்குமார் எழுதியுள்ளார். நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் அன்புக்குரிய நண்பருக்கு நன்றி செலுத்துகிறேன்.என் கவிதைகளை மேலும் பதிப்பகத்தின் மூலம் வெளிட்டுள்ள என் ஆசான் பேராசிரியர் மேலும் சிவசு அவர்களுக்கு நன்றி