Posts

Showing posts from March, 2013

அன்பு அதிகம் சௌந்தர மகாதேவன்

Image
இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு தாய்மாமாக்களை விட  ஆட்டோ மாமாக்களின் மீதே  அன்பு அதிகம்                சௌந்தர மகாதேவன் 

குறுக்குத்துறை சௌந்தர மகாதேவன்

Image
தாமிரபரணி வெள்ளத்தில்  கோவிலோடுக் குளிக்கிறார்  குடைவரை முருகன்                      சௌந்தர மகாதேவன் 

தெருவின் மொழி

Image
மின்சாரமற்று ப் போன இரவுகளில்  தெளிவாகக் கேட்கிறது  தெருவின் மொழி  

நமக்கான நம் கவிதை சௌந்தர மகாதேவன்

Image
என் அனுபவங்களை  நம் அனுபவங்களாக்குகிறேன். நமக்கான   நமக்கான நம்  கவிதை பிறக்கிறது.

நதியில் நீரற்று சௌந்தர மகாதேவன்

Image
காற்றில் கரையும்  கற்பூரம் மாதிரி  நாற்றும் கரைகிறது  நதியில் நீரற்று                    சௌந்தர மகாதேவன் 

வினையின் தொகை .சௌந்தர மகாதேவன்

Image
ஊறுகாய்  வினைத்தொகை. ஊருக்காய்  நாம் பிறந்த  வினையின் தொ கை .       சௌந்தர மகாதேவன்

பரிதாபமாய் தெருக்கள் சௌந்தர மகாதேவன்

Image
பம்பரக்குத்து  விழாமல் படுத்து உறங்குகின்றன  பரிதாபமாய்  தெருக்கள்                         சௌந்தர மகாதேவன்  

மொழி

Image
மொழி  அழகிய உளி  கல்லை விட  ஆழமாய்   காலத்தின் மீது  செதுக்குகிறது .                     சௌந்தர மகாதேவன்

சொல் வனம் …சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Image
யாரோ வீசிய விதைகளிலிருந்து சொற்செடிகள் அடர்த்தியாய் முளைத்துக் கிடக்கின்றன சில இனிப்பாய் சில கசப்பாய் சுவையுணராச் சுதந்திரத்தோடு இன்னும் சில… சொற்களால் வளர்ந்தவர்கள்கூட இப்போது அந்தச் சொற்களைக் கண்டுகொள்வதில்லை சொல்வனத்தில் சொக்கவைக்கும் இலைகளுண்டு பேச்சுமயக்கத்தில் அவ்வப்போது மூர்ச்சையாவோரைத் தெளியவைக்கும் சர்வரோக நிவாரண சஞ்சீவிகளும்                                                    உண்டு அவ்வனத்தின் சில சொற்கள்… விற்கள் குத்தினால் குருதி கொட்டும் சில சொற்கள் விஷ முட்கள், குத்தினால் புரையோடும் பாராட்டு விழாக்கள் நடத்த அவ்வனத்தில் பரந்த வெளியுண்டு – பிடிக்காமல் போய்விட்டால் அவரோடு சமராட அமர்களமும் அங்குண்டு அவ்வனத்தை யாரும் பட்டாப் போட முடியாது சொற்கள் யாவும் சொந்தம் யாவருக்கும் எனவே என் சொல்லென்று எவரும் சொல்ல இயலா அளவுக்குச் சுதந்திரமாய் பரந்து கிடக்கிறது சொல் அதிகாரம் செய்யும் அச்சுந்தர வனம் ஆதலால் எவரும் நீரூற்ற அவசியமற்று நீண்டு வளர்கின்றன அந்தச்சொல்வன

காகங்களும் பாவங்களும்…

Image
இப்போதெல்லாம் மொட்டை மாடியில் காகங்களைக் கண்டால் பாவமாக இருக்கிறது . அப்போதெல்லாம் அம்மா அடுக்களையில் சமையல் முடித்ததை அவளது காக அழைப் பு ஊருக்கு உணர்த்தும். போன புதன்கிழமை நயினா தாத்தாவின் தெவசம் முடித்து வாத்தியார் தந்த பிண்ட உருண்டையைத் தொன்னையில் வைத்து மொட்டை மாடியில் காகத்தைச் சப்தமாய் கூப்பிட்டேன் . சாதத்தைச் சாப்பிட ப் பத்துப் பதினைந்து காகங்கள் பாய்ந்து உடனே உண்ண வந்தது நல்ல சகுனமென்று சொன்ன வாத்தியார் ஒரு வருடமாய் தாத்தாவுக்குத் தாங்காத பசியென் றார் கடும்பசி தாத்தாவுக்கு மட்டும்தானா ? கடும் பசி காகத்திற்கும் தானே ! அது சரி அரைக் கரண்டி ச் சோற்றில்தான் மிச்சப்படுத்தப் போகிறோமா நம் வீட்டுக் கடன்களை ? - சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி .

’எலி’மையோடு வாழ்- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி

Image
எலிகளின் சுரண்டல்கள் சுதந்திரமானவை ! இப்போதெல்லாம் தேங்காய்சில்லுகளைத் தேடி எங்களூர் எலிகள் போவதேயில்லை தப்பித் தவறி ப் பொறிக்குள் புகுந்துவிட்டாலும் அதன் முன் கம்பிகளைக் கடித்துக்குதறி வெளியேறிவிடும் சமார்த்தியமும் அவற்றுக்கு உண்டு . இருட்டு வந்தால் இன்பமாய் அலைவதும் வெளிச்சம் வந்தால் குளிர் பதனப் பெட்டிக்குப் பின் புகுந்து கொள்ளவும் அவற்றால் முடிகிறது அதன் அட்டகாசம் அதிகம் … அபிதான சிந்தாமணியைக் க டித்து க் குதறியிருக்கிறது காகிதக் குப்பையாக .. பொறியில் மாட்டிய எலியை இரும்பு வாளித் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற மகத்தான மான்மியம் அப்பாவினுடையது . வாய்கட்டிய கோணிக்குள் பொறியின் மரக்கதவைத் திறந்துவிட்டு விறகுக் கட்டையால் எலியை அடித்துக் கொல்வார் பட்டுக்கோட்டை மாமா சுரண்டித் தின்னும் எலிகளுக்கு மத்தியில் இற்றுப்போன மரச்சட்டங்களால் ஆன புராதனகாலத்து எலிப்பொறி மட்டும் என்ன செய்துவிட முடியும் ? மாற்றுக்காய் மருந்து வாங்கி வைத்தாலும் தின்று செரித்து விட்ட