Posts

Showing posts from July, 2016

செய்திகள்

Image

தினமலர் என் பார்வை: பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி

Image
உறவுகளின் உரசல்களில் இன்று பூமி புண்பட்டுப் போயிருக்கிறது. தந்தை சொல் மிக்கமந்திரமில்லை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்று புகழப்பட்ட பெற்றோர்-- பிள்ளைகள் உறவு தலைமுறை இடைவெளியால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எப்படி உறவுகளை உடையாமல் காப்பது? சினேகத்தோடு சில பரிந்துரைகள்.. வெளிப்படையாய் இருங்கள் :அடி நாக்கில் நஞ்சையும் நுனி நாக்கில் அமுதையும் வைத்துக்கொண்டு உறவுகளைப் பேணமுடியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதாதிருங்கள். எல்லோரையும் அப்பாவியாய் நம்பிவிடுவதும் எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படுவதும் ஆபத்தானது என்று உணருங்கள். எடை போடும் இயந்திரமா நாம்? அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழுக்களாகத்தான் இருக்கும். அதனால் யாரையும் துப்பறிய நினைக்காதீர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தரம்குறைய விமர்சிக்காதீர்கள், காரணம் எடை போடும் இயந்திரங்கள் அல்ல நாம். முழுமையான மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவரின் குறையையும் கருத்தில்கொண்டு பழகத்தொடங்கினால் யாரிடமும் நட்பு பாராட்ட முடியாது. எனவே ஜாதி மத இன பேதங்கள் இன்றி அனைவரிடமும்

விருதுகளில் வெளிப்படைத்தன்மை

Image
பல வாசகர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை அ.முத்துலிங்கத்திடம் சுருக்கமாகவும் சுருக்கென்றும் கேட்டிருக்கிறார் அரவிந்தன். வெளிப்படைத் தன்மையில்லாத விருதுகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன.  ஒரே ஒரு புதினம் எழுதி தமிழின் மிக உயர்ந்த விருதுகளைப் பெற்றுவிட முடிகிற நிலையும், மறுபக்கம் அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுதிய மூத்த எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளாத நிலையும் இருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் அந்தந்த ஆண்டு விருது வழங்கப்படும்போது, யார் யார் பெயர்கள் அவ்வமயம் கருத்தில்கொள்ளப்பட்டன, அவர்களின் படைப்புகள் மீது என்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டன, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் போன்றவற்றையும் வெளிப்படையாக அறிவித்தால் சிறப்பாக இருக்கும்.  அதேபோல, மூத்த எழுத்தாளர்களின் உடல்நலம் ஆய்ந்து, தேவைப்படின் அவர்களின் எழுத்தறைக்கே சென்று விருதைக் கொடுக்கலாம். தர வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்!  - பேராசிரியர் சௌந்திரமகாதேவன், திருநெல்வேலி.

கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில்

Image
சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி திலகர் பிறந்தநாளைப் பள்ளி ஆண்டுவிழாவாய் கொண்டாடும் பள்ளி தமிழ்நாட்டில் அதுவும் கல்லிடைக்குறிச்சியில் அதுவும் 105 ஆண்டுகளாக வெகுசிறப்பாக சுதந்திரப் போராட்ட நினைவுகளோடு இயங்கிவருகிறது.மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் பணியமர்த்துதலிலோ ஒருபைசா கூடப் பெறாமல் நூறாண்டுகளைக் கடந்தும் இன்றும் நேர்மையாக, அதுவும் மாவட்ட, மாநில அளவில் சாதனை புரியக்கூடிய சாதனைப்பள்ளியாக செயல்பட்டுவருகிறது என்பதைச் சுமார் 18 ஆண்டுகளாகக் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.  அம்பாசமுத்திரம் தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராய் பணியாற்றிய சுதந்திரப்போராட்ட வீரர் திரு.கோமதிசங்கர தீட்சிதர் அவர்களின் பெயரர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரின் மேனாள் கணிதவியல் துறைத்தலைவராக இருந்தார்,அவர்தான் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு குறித்தும், தொடர்ந்து 50 ஆண்டுகளாய் பள்ளிச் செயலாளராய் 80 வயதிலும் சுறுசுறுப்பாய் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.கே.எஸ்.சங்கரசுப்பிரமணியன் குறித்தும் `பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.  திலகர்மீதும் சுதந்திரப் போர

கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா

Image
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா ............................................................................... சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி திலகர் பிறந்தநாளைப் பள்ளி ஆண்டுவிழாவாய் கொண்டாடும் பள்ளி தமிழ்நாட்டில் அதுவும் கல்லிடைக்குறிச்சியில் அதுவும் 105 ஆண்டுகளாக வெகுசிறப்பாக சுதந்திரப் போராட்ட நினைவுகளோடு இயங்கிவருகிறது. மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் பணியமர்த்துதலிலோ ஒருபைசா கூடப் பெறாமல் நூறாண்டுகளைக் கடந்தும் இன்றும் நேர்மையாக, அதுவும் மாவட்ட, மாநில அளவில் சாதனை புரியக்கூடிய சாதனைப்பள்ளியாக செயல்பட்டுவருகிறது என்பதைச் சுமார் 18 ஆண்டுகளாகக் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அம்பாசமுத்திரம் தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராய் பணியாற்றிய சுதந்திரப்போராட்ட வீரர் திரு.கோமதிசங்கர தீட்சிதர் அவர்களின் பெயரர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரின் மேனாள் கணிதவியல் துறைத்தலைவராக இருந்தார்,அவர்தான் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு குறித்தும், தொடர்ந்து 50 ஆண்டுகளாய் பள்ளிச் செயலாளராய் 80 வயதிலும் சுறுசுறுப்பாய் பணியாற்றிக்கொண்டிருக

மாணவர்களின் கவிதைகளை நூலாக வெளியிடும் கல்லூரி அ.அருள் தாசன்-----தி இந்து

Image
மாணவர்களின் கவிதை தொகுப்பு நூல் திருநெல்வேலி மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் எழுதிய கவிதைகளை நூலாக வெளியிட்டு வருகிறது பாளையங்கோட்டை சதக்கத் துல்லா அப்பா கல்லூரி. இக்கல்லூரியின் மாணவர் பேரவை விழா கலை இலக்கிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டா டப்படுகிறது.  மாணவர் களின் பேச்சாற்றலுக்காக ஒவ்வோர் ஆண்டும் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவை , மாண வர் பேரவை ஆகியவை , திருநெல் வேலி அகில இந்திய வானொலி யோடு இணைந்து , 10 ஆண்டு களுக்கும் மேலாக இளையோர் மேம்பாட்டு பொங்கல் பட்டி மன்றத்தை நடத்தி வரு கின்றன. கவிதைத் தொகுப்பு மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் , தொடர்ந்து 3 ஆண்டுகளாக நூற் றுக்கும் மேற்பட்ட மாணவ , மாண வியர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறது இக்கல்லூரியின் தமிழ்த்துறை. அந்தந்த ஆண்டுக்கான கவிதைத் தொகுப்பின் தலைப்பை கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக் தெரிவிக்க , பலநூறு மாணவ , மாணவியர் கவி தைகளை எழுதி தமிழ்த்துறை பேராசிரியர்களிடம் தருகிறார்கள். அதை அவர்கள் பிழை திருத்தி செம்மைப்படுத்துகிறார்கள். பேர

திருநெல்வேலியில் “மேலும் இலக்கிய அமைப்பு” நடத்திய புதுமைப்பித்தன் நினைவுநாள் கருத்தரங்கு

Image
வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவுக்குப் புதுமைப்பித்தன் சாலை என்று பெயரிடத் தீர்மானம் தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் நினைவு நாளான ஜூன் 30   அவர் படைப்பிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கை “மேலும்” இலக்கிய அமைப்பு தொடர்ந்து   பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இவ்வாண்டு புதுமைப்பித்தன் நினைவுநாளன்று மாலை 6 மணிக்கு திருநெல்வேலி சைவசபையில்   நடைபெற்ற   கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சுரண்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.   மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றினார். “ அவர் தமது தலையுரையில் புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் கருத்தாழம் மிக்கன. குறிப்பாக அவர் எழுதிய சாபவிமோசனம் கதை உலகத் தரம் மிக்க நவீன சிறுகதையாகத் திகழ்கிறது. புதுமைப்பித்தன் வாழ்ந்த திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவைப் புதுமைப்பித்தன் சாலைத் தெரு என்று பெயரிட்டு அவரைச் சிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்தை மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்வதோட