Posts

Showing posts from October, 2017

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

Image
         தமிழ் இலக்கியப் பதிவுகளில் சூரசம்ஹாரம்              பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சஷ்டியில் விரதமிருந்தால் அகம் எனும் பையில் அருள்சுரக்கும்! அந்த அளவு வலிமை மிகுந்த கந்தர் வழிபாடும் சூரசம்ஹாரமும் பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டதைத் தமிழ் இலக்கியம் பாடல்வரிகளால் பதிவுசெய்துள்ளது.   தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தந்துவந்த சூரபத்மனின் அகந்தையை அழிப்பதற்குச் சிவபெருமான் தன் அதோமுகத்தைக் காட்ட அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிருந்து ஆறுமுகங்கள் ஆறு குழந்தைகளாய் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் எழுந்தருள, அவர்களை ஆறுகார்த்திகைப் பெண்கள் வாரியணைக்க ஈசன் சில காலத்தில் ஆறுமுகப்புதல்வர்களை ஒன்றாக்கினார். முருகப்பெருமான் சூரனை அழிக்க நூறுமுகங்களின் ஒளிப்பிழம்போடு ஆறுமுகமாய் அவதரித்தார். அன்னை பராசக்தி தன் சக்தியை ஒன்றுதிரட்டிச் சக்திவேலை தந்தாள். தாய் தந்த வேலை சூரபத்மன் மீது திருமுருகன் வீச அவன் மாமரமாய் மாயத்தோற்றம் எடுத்தான். முருகனின் சக்திவேல் அம்மரத்தைப் பிளக்க, மயிலாகவும் சேவலாகவும் சூரபத்மன் மறுவ

மாணவர் வாசகர் வட்டம் - சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்

Image
திருநெல்வேலியில் மாணவர் வாசகர் வட்டம் .................................................................................................... மாணவர்களை வாசிக்க வைக்காமல் எத்தனை புத்தகத்திருவிழாக்கள் நடத்தினாலும் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று ஒரு மாணவர் வகுப்பில் பேசும்போது குறிப்பிட்டார்.  வாசிக்கும் பழக்கத்தை இளையதலைமுறையிடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் நெடுநாட்களாகவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.கலலூரி முதல்வரிடம் தெரிவித்தேன்.  தாராளமாய் மாணவர் பேரவையோடு இணைந்து மாணவர் வாசகர் வட்டத்தை உருவாக்குங்கள் என்று தெரிவித்தார். சீதக்காதி தமிழ்ப் பேரவையோடு மாணவர் பேரவையும் இணைந்தது. கடந்தமாதம் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கியது. ஒவ்வொருமாதமும் முதல் திங்கட்கிழமை மதியம் இரண்டுமணி முதல் நான்குமணி வரை என்று அறிவித்தோம். எழுதவிரும்பும் பேசவிரும்பும் வாசிக்க விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று அறிவித்தோம். கடந்தமாதம் நடந்த நிகழ்வுக்கு எழுபது மாணவ மாணவியர் வருகை தந்திருந்தனர். நூல் தேர்வு முதல் நூல் விமர்சனம் வரை மாணவர்களே செய்தனர்.பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்கிற நூ