திருநெல்வேலியில் கண்முன்னே விரியும் கடல் நூல் வெளியீட்டு விழா



கடலாய் விரியும் திருநெல்வேலி
..........................................................................
திருநெல்வேலியை எனக்கு ரசிக்கக் கற்றுத் தந்தவன் என் நண்பன் பாலாதான். வண்ணதாசனின் அகம்புறம், சுகாவின் மூங்கில் மூச்சு, கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் நூல்களுக்குப் பிறகு நாறும்பூவின் மூன்றாம் படைப்பு. நெல்லையை முகநூலில் இவ்வளவு அழகாகக் காட்ட முடியுமா? கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாயோடு காரகாராசேவோடு நெல்லை புகுந்த நாறும்பூ படைத்த முகநூலின் பதிவுகள் நூலாய் எழுத்தாளர் நாறும்பூநாதன் கைவண்ணத்தில் “கண்முன்னே விரியும் கடல்” நூல். மரியா காண்டீன்,லூர்துநாதன் சிலை,சுலோசனமுதலியார் பாலம்,திருநெல்வேலி டவுண்,ராயல் தியேட்டர் என்று விரிகிறது அந்த

நூல். வெளியீட்டு விழாவில் பங்கேற்றோம். பொழுது போக்குக் களம் என்பதை உடைத்து அவர் கடந்த ஒன்பது மாதங்களாய் சமுதாயத்தைப் பழுதுபார்க்கும் களமாக மாற்றியிருந்ததை வெகு நேர்த்தியாய் நூலாக்கியிருந்தார்.கண்முன்னே உண்மையில் முகநூல் நண்பர்கள் கடல்.இருக்கஇடமில்லை..நிரம்பிவழிந்தது கூட்டம்.உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தவர் என்பதால் நண்பர்கள் திரண்டுவந்திருந்தனர்.டே..மாரீஸ் வாடா..என்று உதயசங்கர் மேடையில் நின்று நாறும்பூவின் நண்பர்களை அழைத்து அனைவரும் சேர்ந்து தன் நண்பனுக்குப் பொன்னாடை போர்த்தியபோது கண்ணீர்வந்தது.எண் 106,கோவில்பட்டி,சாரதா ஸ்டுடியோ மாடியில் விடுவிடுவென படியேறி வந்த அந்தப் பெரியவர் வரிசையாய் தலையை எண்ணி ஒன்பதுபேராடா..என்று சொல்லியபடி மாடியில் இருந்தே..:”நைனா ஒன்பது டீ,ஒன்பது சம்சா கொண்டா..இன்னக்கி என்னோட அறுபதாவது பிறந்தநாள்டா..” என்று நாறும்பூவிடம் சொன்ன அந்தப் பெரியவர் கி.ரா..நாறும்பூ எழுதுகிறார் தன்னிடம் காலம் எழுதிச்சென்றதை..ஓடிக்கொண்டே இருக்கிறது அவர் எழுத்துக்கள் மனதிற்குள் இன்னும்..நாம் வாழ்ந்த வாழ்க்கையை யார் எழுதமுடியும் நம்மைவிட உயிர்த் துடிப்பாய்..?
*
சௌந்தர மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்