திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வு



திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து பாளையங்கோட்டை சைவசபையில் 16.11.2016 புதன்கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வை நடத்துகின்றன.
உலக கிளாசிக் நாவலான காபிரியேல் கார்சியா மார்க்கேஸின் “ முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நா.ஜிதேந்திரன் உரையாற்றுகிறார்.

நூற்றாண்டு கண்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர் லா.ச.ராமாமிர்தம் படைப்புலகம் குறித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் “லா.ச.ரா.- நெருப்பில் பூத்த பனித்துளி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

படைப்பிலக்கியக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தும் நோக்கில் பேராசிரியர் மேலும் சிவசு “ படைப்பாளி – படைப்பு – வாசிப்பாளி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 


நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் மேலும் சிவசுவின் செல்பேசியில் ( 94432 17804) பேசி பெயர்ப்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பபின் செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.
                                            ச.மகாதேவன், செயலாளர்
                                           மேலும் இலக்கிய அமைப்பு
                              
                      


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்