சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வகுப்புகள் ஜுன் 18 அன்று தொடக்கம்


சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வகுப்புகள் ஜுன் 18 அன்று தொடக்கம்

பருவத்தேர்வு விடுமுறை முடிந்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் இளநிலை வகுப்புகள் அனைத்தும் வரும் ஜுன் 18 திங்கட்கிழமை காலை எட்டுமணிக்குத் தொடங்குகின்றன. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் அனைத்து இளங்கலை,இளம் அறிவியல், இளம்வணிகவியல், இளம் வணிகமேலாண்மை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு பட்டவகுப்புகள் அனைத்தும் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஜுன் 18 திங்கட்கிழமை காலை எட்டுமணிக்குத் தொடங்குகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி
இவ்வாண்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புதிதாய் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவியருக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள், வரும் ஜுன் 18 திங்கட்கிழமை முதல் இருநாட்கள் நடைபெறுகின்றன.

 இளநிலைப் பட்ட வகுப்பில் இவ்வாண்டு புதிதாகச் சேர்ந்துள்ள ஷிப்ட் 1 மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் ஜுன் 18 திங்கட்கிழமை காலை 8 மணிக்கும், ஷிப்ட் 2 மாணவ மாணவியர் பிற்பகல் 1.10 மணிக்கும் கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரிக் கலையரங்கில் நடைபெறும் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டும்.


இப் புத்தாக்கப் பயிற்சியில் கல்லூரி முதல்வர், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர், தேர்வாணையர், நிதிக்காப்பாளர், விடுதித் துணைக் காப்பாளர்கள், அலுவலகக் கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்று கல்லூரி நடைமுறைகள் குறித்து பெற்றோர்களுடன் உரையாடுகிறார்கள்.


அதன்பின் மாணவ மாணவியருக்கு இருதினங்கள் கல்லூரி குறித்த அறிமுகத் தகவல்கள், ஆளுமை மேம்பாடு, உயர்கல்வி வாய்ப்புகள், நூலக வசதி, விளையாட்டு, திறன்மேம்பாடு தொடர்பான உரைகளைப் பேராசிரியர்கள் வழங்குகிறார்கள். எனவே குறித்த நேரத்தில் மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் தவறாது கலந்துகொண்டு பயன்பெறவேண்டுகிறோம்.” என்று செய்திக் குறிப்பில் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்