திருநெல்வேலி சௌந்தர மகாதேவன் கவிதைகள்



மனைவி மறந்து விட்டாலும்
துணிக்கடைக் கணிப் பொறிகளின்
தகவல் தளங்கள் தவறாமல்
பிறந்த நாள் வாழ்த்தட்டைகளைத்
தகுந்த நேரத்தில் தட்டிவிடுகின்றன.
           அன்பையும் வணிக விளம்பரமாக்க



                அவர்கள் அழகாகத் தெரிந்திருக்கிறார்கள்

உடன் பணியாற்றுகிறவன்
என் பிறந்தநாளை மனதில் வைத்தே
இயங்குகிறான்
அவனது பதவி உயர்வுக்காய்
எனக்கு நானே விளம்பரம் தந்து வரவேற்க
இன்னும் அரசியல் பக்கம் போகவில்லை

நானே கேக் வெட்டி
நானே சாப்பிட வேண்டிய
சராசரி மனிதன் நான்

உடைந்த வளையல் துண்டுகளாலும்
வர்ணஜாலத்தை உண்டாக்கக்
கலைடாஸ்கோப்புகளால்
மட்டுமே முடியும்

நாம் சாதாரணமாகவே
இயல்பாகவே
இருந்துவிட்டுப் போகலாமே!



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்